வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பேங்காங் பப்பில் ஜாலி பண்ணும் ஓவியா.. கொடிய நோய் இருப்பதாய் சர்ச்சையை கிளப்பும் பிரபலம்

Actress Oviya: நடிகை ஓவியாவிற்கு கொடிய நோய் ஒன்று இருப்பதாக பிரபலம் ஒருவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். மெரினா, மதயானை கூட்டம், கலகலப்பு, களவாணி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பரீட்சையமானார் ஓவியா.

இவரை தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்த்தது பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி தான். இப்படியும் கூட மனிதர்கள் இருக்க முடியுமா என ஓவியாவை பார்த்து நாளுக்கு நாள் பொதுமக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

பப்பில் ஜாலி பண்ணும் ஓவியா

யாரையும் பற்றி தவறாக பேசாமல், தனக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு தைரியமாக குரல் கொடுத்தது மக்களுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. பிக் பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள் ஓவியா மீது வெறுப்புகள் அதிகமாக ஏற்பட்டு எல்லோரையும் அவரை ஒதுக்கி வைக்க வெளியில் நிலைமையே வேறு.

மொத்த தமிழ் மக்களும் ஓவியாவுக்கு ஆதரவை கொடுத்தார்கள். தனக்கு இருந்த ஆதரவை வெளியில் வந்த பிறகு ஓவியா சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 90 எம் எல் படத்தில் நடித்த பிறகு மக்களுக்கு ஓவியம் மீது ஒருவித அதிருப்தியும் ஏற்பட்டது.

பின்னர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் இருந்த ஓவியாவின் வாழ்க்கையில் கடந்த வாரம் ஒரு பெரிய புயல் அடித்தது. ஓவியா நண்பர் ஒருவருடன் இருக்கும் அந்தரங்க வீடியோ என்று சொல்லி ஒரு சின்ன கிளிப் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

முதலில் அந்த வீடியோவில் இருப்பது நான்தான் என மறைமுகமாக சொன்ன ஓவியா அதன்பின்னர் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று சொல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். புகாரை கொடுத்துவிட்டு ஓவியா ஜாலியாக பேங்காங் சென்றுவிட்டதாக பிரபல மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சொல்லி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ஓவியாவிற்கு மனதளவில் சிறிய பாதிப்பு ஏற்பட்டு பின்னர் அது மனப்பிரழ்ச்சியாக மாறிவிட்டதாகவும், அவருக்கு மன நோய் என்னும் கொடிய நோய் இருப்பதாகவும் சர்ச்சையாக பேசி இருக்கிறார் பயில்வான்.

Trending News