வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Kavin: ஓவர் ஆட்டம் ஆடாதீங்க, காணாம போயிடுவீங்க கவின், மணி.. இளம் ஹீரோக்களை திட்டி தீர்த்த பிரபலம்

Kavin: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளனும்னு சொல்லுவாங்க. ஆனா இந்த இளம் ஹீரோக்கள் பேராசையால் கொஞ்சம் அதிகமாகவே தூற்றிக் கொள்கிறார்கள் போல. ரஜினி- கமல், விஜய்- அஜித், விக்ரம்- சூர்யா, விஜய் சேதுபதி- சிவகார்த்திகேயன் என்ற காம்போவில் தமிழ் சினிமா போட்டியில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

இதில் நடிகர் தனுஷ் வேற ரகம். இவர்களைத் தாண்டிய அடுத்த கட்ட சினிமா என்பது யாரை நம்பி இருக்கிறது என்று பார்த்தால் அது ஹரிஷ் கல்யாண், கவின், மணி தான். அதிலும் கவின் மற்றும் மணிகண்டன் இருவருக்கும் இப்போது பயங்கர டிமாண்ட்.

தமிழ் சினிமா ரசிகர்களால் ஜீனியஸ் என்று அழைக்கப்படும் செல்வ ராகவன் கூட சமீபத்தில் கவின் மற்றும் மணியை பாராட்டி பேசி இருந்தார். கவினுக்கு டா டா படம் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. தமிழ் சினிமாவின் அடுத்த சிவகார்த்திகேயன் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

மணிகண்டன் நடித்த குட் நைட் படம் தமிழ் சினிமாவின் ஒரு அடையாளம் என்று கூட சொல்லலாம். அடுத்தடுத்து இவர்களை வெள்ளி திரையில் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் காலகட்டத்திலேயே கவின் மற்றும் மணி இருவரும் தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகர்களாக இருக்க தவறுகிறார்களோ என்ற சந்தேகம் இப்போது எழுந்து இருக்கிறது.

சினிமாவில் எதையுமே நம்ப முடியாது எப்போ வாய்ப்பு வரும், எப்ப வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதெல்லாம் அவர் அவர்களுடைய தலையெழுத்து தான். இதனால் தான் என்னவோ வாய்ப்பிருக்கும்போதே சம்பாதித்து விடலாம் என்று இவர்கள் இருவரும் நினைத்து விட்டார்கள் போல.

ஆனால் பணம் என்பதை தாண்டி ரசிகர்கள் இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணி இந்த இளம் ஹீரோக்களை பற்றி ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அதில் இரண்டு மூன்று ஹிட் படங்கள் கிடைத்தாலே இளம் ஹீரோக்கள் தங்களுடைய சம்பளங்களை உயர்த்தி விடுகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு தங்களால் லாபம் வருகிறதா என்பதை பொறுத்து சம்பளத்தை உயர்த்துங்கள்.

ஆரம்பத்திலேயே அதிகமாக ஆடாதீர்கள், காணாமல் போய்விடுவீர்கள் என்று நாசுக்காக சொல்லி இருக்கிறார். கவின் ஸ்டார் படம் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆக ஆரம்பித்துவிட்டது. படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறார், சம்பளம் அதிகமாக கேட்கிறார் என்று தினம் ஒரு செய்தி வெளியானது.

அதற்கு ஏற்ற மாதிரி ஸ்டார் படமும் எதிர்பார்க்க வெற்றியைப் பெறவில்லை. இன்னும் பிள்ளையார் சுழி போட்ட இடத்தில் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து தயாரிப்பாளர்கள் விரும்பும் ஹீரோவாக கவின் இருப்பது ரொம்பவும் அவசியமான ஒன்று.

Trending News