புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்க்கு சூர்யா வாய்ப்பு கொடுக்கலைன்னா இப்ப அட்ரஸ் தெரியாம போயிருப்பாரு.. சர்ச்சையை கிளப்பி ஞானவேல்

Actor Surya : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சூர்யாவுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். இவர் ஸ்டுடியோ கிரீன் மூலம் நிறைய படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கும் இயக்குனர் அமீருக்கும், பருத்திவீரன் படத்தால் ஏற்பட்ட சிக்கல் மூலம் பிரச்சனை வெடித்தது. சூர்யாவின் சிங்கம் படத்தை ஸ்டுடியோ கிரீன் தான் தயாரித்து இருந்தது.

இந்நிலையில் விஜய்க்கு சூர்யா வாய்ப்பு கொடுத்ததால் தான் இப்போது அவர் பெரிய நிலைமையில் இருப்பது போல் தயாரிப்பாளர் ஞானவேல் ஊடகத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இதை அடுத்து இதே கூட்டணியில் உருவானது தான் ஏழாம் அறிவு. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. ஏஆர் முருகதாஸ் சூர்யாவுக்கு தான் துப்பாக்கி படத்தை தயார் செய்து வைத்திருந்ததாக ஞானவேல் கூறியிருக்கிறார்.

Also Read : வெற்றிமாறன், சுதா கொங்காராவை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த சூர்யா.. வருஷகணக்கா சொல்லும் காரணம்

இந்நிலையில் விஜய்க்காக துப்பாக்கி படத்தை கொடுத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறியிருக்கிறார். அதேபோல் சினிமாவில் உள்ள பல பிரபலங்களுக்கு சூர்யா உதவி செய்திருக்கிறார். துப்பாக்கி படம் சூர்யா செய்திருக்க வேண்டிய படம் என்று சொல்லி உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று கிண்டல் அடித்து உள்ளனர். சூர்யாவுக்கு நேருக்கு நேர் படத்தை கொடுத்து வாழ்க்கை தந்ததே விஜய் தான் என்றும் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் விஜய் தவிர துப்பாக்கி படத்தில் வேறு எந்த ஹீரோ நடித்து இருந்தாலும் இவ்வளவு பெரிய ஹிட் ஆகுமா என்பது சந்தேகம் தான்.

Also Read : செல்பி சிவகுமாரின் அடுத்த அநாகரிகமான செயல்.. பொது இடத்தில் காத்தோடு போன சூர்யாவின் மானம்

Trending News