Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் தனது 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் ஜெயிலர் படம் வெற்றி பெற்ற ஒரு வாரத்திலேயே மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது தான்.
அதோடு மட்டுமல்லாமல் ராமர் பாலத்தை ரஜினி பார்க்க சென்றதும் ஜெயிலர் வசூல் பின்னடைவை சந்தித்தது. ஜெயிலர் ரிலீஸீக்கு முன்பாக ரஜினி இவ்வாறு செய்திருந்தால் படம் வெற்றி அடைந்திருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் முன் வைத்திருந்தனர். இந்நிலையில் முஸ்லிமுக்கு எதிராக சதி செய்ய இங்க ஒரு பெரிய கூட்டம் காத்திருப்பதாக சினிமா மற்றும் அரசியல் விவாதங்களை பேசக்கூடிய ராஜகம்பீரன் கூறியிருக்கிறார்.
Also Read : அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?
அவர் நேரடியாகவே முஸ்லிம்க்கு எதிராக படம் எடுக்க சொல்லி கலைப்புலி எஸ் தாணு பல இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் அணுகி உள்ளதாக கூறியிருக்கிறார். அதன்படி முன்னணி இயக்குனர்களான பா. ரஞ்சித் மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோரையும் முஸ்லிமுக்கு எதிராக படம் எடுக்க சொன்னனர்.
ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாக ராஜகம்பீரன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும் ரஜினியும் முஸ்லிம் எதிராக எப்போதுமே இருந்திருக்கிறார். இப்போது அதன் நிலைப்பாடாகத்தான் தன்னைவிட வயதில் குறைவான யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்திருக்கிறார்.
Also Read : ரஜினி படத்திற்கு நாள் குறித்த லோகேஷ் கனகராஜ்.. அப்டேட்டுகளில் அதிரடி கிளப்பும் சூப்பர் ஸ்டார்
மேலும் இதெல்லாம் அரசியல் நோக்கத்திற்காக ரஜினி செய்யவில்லை என்றும் தனது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக செய்திருக்கிறார். ஆகையால் ரஜினியும் சுயநலத்துடன் தான் எல்லாவற்றையும் செய்கிறார் என ராஜ கம்பீரன் சொன்னதற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
அதாவது முஸ்லிமுக்கு எதிரானவர் ரஜினி என்றால் லால் சலாம் படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தலைவர் 170 படமும் முஸ்லிம் கதையை மையமாக வைத்து தான் எடுக்கப்பட உள்ளதாக ராஜகம்பீரன் பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.