வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இதெல்லாம் தேவையில்லாத ஆணி தான்.. கேப்டன் மில்லர் படத்தை விமர்சித்த பிரபலம்

Captain Miller: சமீப காலமாகவே டாப் நடிகர்கள் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டிக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தனுஷும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வெரைட்டி கட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்திற்காக பல மாதங்களாக தன்னுடைய உழைப்பை கொடுத்திருக்கிறார்.

இதற்காகவே அவருடைய கெட்டப்பையும் மாற்றினார். அந்த படம் முடிந்த கையோடு இப்போது அவர் தனது சொந்த இயக்கத்தில் நடிக்க இருக்கும் தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்திற்காகவும் மொட்டை போட்டு அடுத்த கெட்டப்பிறகு தயாராக இருக்கிறார். இந்த சூழலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிட போவதாக சொல்லப்படுகிறது.

Also Read: விஜய்யை ஓரங்கட்ட நினைக்கும் தனுஷின் மாஸ்டர் பிளான்.. ஒட்டுமொத்தமாக செய்யும் சதி வேலை

இதைப்பற்றி திரை விமர்சகர் அந்தணனிடம் கேட்டபோது, இரண்டு பாகங்களாக வெளியாகும் படங்கள் சமீப காலமாகவே
வெற்றி பெறாமல் தோல்வியை தான் சந்திக்கிறது. பொதுவாக முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் ரசிகர்களை பெரிதாக கவர்வதில்லை.

ஏனென்றால் பார்ட் 2 எல்லாம் தேவையில்லாத ஆணி தான். ஒரு படத்தை வதவதனு எடுத்துவிட்டு கடைசியில் பல காட்சிகளை கட் செய்தாலும் மூன்று மணி நேரத்திற்கு மேல் திரையிடும் அளவிற்கு படத்தை எடுத்து விடுகின்றனர். அதன் காரணமாகவே தான் அந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளிவிடலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர்.

Also Read: நாலா பக்கம் சர்ச்சையை கிளப்பும் மில்லர்.. விலை உயர்ந்த அந்த காரை கேட்டு தயாரிப்பாளருக்கு டார்ச்சர்

சமீப காலமாகவே இதை பல இயக்குனர்கள் செய்து வருகின்றனர். இதுதான் கேப்டன் மில்லர் படத்திலும் நடந்திருக்கிறது. நீண்ட நாட்களாக இந்த படப்பிடிப்பு நடைபெறுவதால் அருண் மாதேஸ்வரன் நிறைய காட்சிகளை எடுத்து குவித்து வைத்திருக்கிறார். இருப்பினும் அவர் மற்ற இயக்குனர்களை காட்டிலும் வித்தியாசமான பாதையில் செல்லக்கூடியவர்.

அவர் கேப்டன் மில்லரை இரண்டு பாகங்களாக வெளியிடும் முயற்சியை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் அவர் கேப்டன் மில்லரை ஒரே பாகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படத்தை துவங்கி, கடைசியில் இரண்டு பாகங்களாக எடுத்து முடித்திருக்கிறார் என அந்தணன் சமீபத்திய பேட்டிகள் விமர்சித்துள்ளார்.

Also Read: தனுசுக்கு அண்ணன்களாக நடிக்கும் முரட்டு வில்லன்கள்.. 50வது பட வெற்றிக்காக கொக்கி போட்டு தூக்கிய சன் பிக்சர்ஸ்

Trending News