வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

1000 கோடிக்கு வடை ரெடி, ஜெயிலரை மொக்க பண்ணும் பிரபலம்.. நீயே டிக்கெட் இல்லாம தெருவுல சுத்த போறது கன்பார்ம்

Actor Rajini: நாளை திரையரங்குகளில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எல்லையற்றதாக இருக்கிறது. இதற்கு காரணம் ரஜினியின் தோற்றம் ஜெயிலர் படத்தில் மிகவும் இளமையாக இருக்கிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படங்களில் வயதான தோற்றத்துடன் இருந்தார்.

ஆனால் ரஜினியின் பழைய எனர்ஜி, ஸ்டைல் என அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார் நெல்சன். அதோடு மட்டுமல்லாமல் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து படையப்பா படத்தில் நடித்திருந்தார். அப்போது ஜெயிலர் படத்தில் அவரது மனைவியாக வைத்திருக்கிறார்.

Also Read : இலவச டிக்கெட், விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 10.. புது ட்ரெண்டை உருவாக்கி பவரை காட்டிய ஜெயிலர்

தமன்னாவின் காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இவ்வாறு ஜெயிலர் படத்திற்கு முழுக்க முழுக்க பாசிட்டிவ் விஷயங்கள் பரவி வரும் நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மட்டும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருகிறார். அதிலும் ரஜினியை மோசமாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில் ஜெயிலர் படத்தை மொக்கை பண்ணும் அளவிற்கு ஆயிரம் கோடிக்கு வடை ரெடி என்ற ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். மேலும் ரஜினி ரசிகர்கள் அப்பளத்தை நொறுக்க சம்மட்டி தேவை இல்லை என மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசி வருவதாகவும் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு போட்டிருக்கிறார்.

Also Read : ஜெயிலர் பார்த்தாச்சு, 4 வருடம் கழித்து இமயமலை கிளம்பிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

மேலும் ப்ளூ சட்டை மாறனை விமர்சிக்கும் படியாக ஒருவர் சூரியனை பார்த்து நாய் குலைப்பது போல தான் இவர் செய்து வருகிறார். பிறரை தரம் தாழ்த்தி பேசி வயிறு வளர்க்கும் ஜென்மம் தான் ப்ளூ சட்டை என தாறுமாறாக விமர்சித்து இருக்கிறார். இந்நிலையில் கண்டிப்பாக ஜெயிலர் படம் நாளைக்கு வெளியாகும் நிலையில் மோசமான விமர்சனத்தை தான் ப்ளூ சட்டை மாறன் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த சூழலில் ஆயிரம் கோடி என வடை சுட்டுக் கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் பட டிக்கெட் கிடைக்காமல் தெருவில் தான் சுத்தணும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதேபோல் ஜெயிலர் பட டிக்கெட் அசுர வேகத்தில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் நாளை ப்ளூ சட்டை மாறனின் ஜெயிலர் விமர்சனத்திற்காக ரஜினிக்கு எதிராக உள்ளவர்கள் காத்திருக்கிறார்கள்.

1000 கோடிக்கு வடை ரெடி

என

ஜெயிலரை மொக்க பண்ணும் ப்ளூ சட்டை மாறன்

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : இந்த ஆண்டு யாருமே பண்ணாத வசூலை வாரி குவிக்கும் ரஜினி.. அஜித், விஜய், ps2 படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்

Trending News