ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது.. தேவையில்லாமல் சீண்டி வாங்கி கட்டிய பிரபலம்

Actor Vijay: விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடா விட்டாலும் அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் அதை உறுதி செய்து கொண்டு தான் இருக்கிறது. அப்படித்தான் சமீபத்தில் அவர் மாணவர்களுடன் நடத்திய சந்திப்பு பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது.

அதுவே தற்போது பலரின் வாய்க்கு அவலாகவும் மாறி இருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் அரசியல் நகர்வு பற்றி வலை பேச்சு பிரபலம் பிஸ்மி அடிக்கடி சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் தற்போது அவர் பேசியிருக்கும் விஷயத்தால் கொந்தளித்துப் போன ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

Also read: முதல்வர் ஆசை இருந்தா மட்டும் போதாது.. லியோ பாடலை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை

அதாவது விஜய் போன்ற சினிமா நடிகர்கள் ரசிகர்களை நம்பி தான் அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு படத்தையே அவர்களால் பத்து நாட்களுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓட வைக்க முடியாது. அப்படி ஒரு மைனாரிட்டி செக்ட்டராக இருப்பவர்கள் தான் ரசிகர்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு நடிகரை முதலமைச்சர் நாற்காலியில் எப்படி உட்கார வைக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் தற்போது 6 கோடிக்கு மேல் வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் விஜய்யின் ரசிகர்களை கணக்கில் வைத்துக் கொண்டால் மிக சொற்பமான நபர்கள் தான் இருக்கின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது பல தொகுதிகளில் அவர் டெபாசிட்டை கூட பெற முடியாது என்பதுதான் என்னுடைய கணிப்பு என ஆணித்தரமாக கூறியுள்ளார்.

Also read: விஜய் பிறந்தநாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 14 வருடங்கள் ஆகியும் மாறாத கெமிஸ்ட்ரி

கடந்த சில நாட்களாகவே இவர் விஜய்யின் அரசியல் வரவு குறித்து இப்படிப்பட்ட கருத்துக்களை தான் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது ரசிகர்களை தாக்கும் விதமாக அவர் பேசியிருப்பது அடுத்த பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது.

மேலும் விஜய்யை வைத்து அவர் பப்ளிசிட்டி தேடி கொள்கிறார் என்ற கருத்தும் எழுந்துள்ளது. ஆனால் இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. விஜய் தன்னுடைய அரசியல் ஆசையை நாசுக்காக வெளிப்படுத்தும் போதே இவ்வளவு பிரச்சனைகள் எழுகிறது. இதில் அவருடைய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தால் பல தரமான சம்பவங்கள் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: 2000 டான்சர்களோடு மரண குத்து போட்ட தளபதி.. லியோவின் ‘நா ரெடி’ பாடல் வீடியோ

Trending News