வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரெட்டை வேஷம் போடும் ரஜினி.. ஊருக்கு தான் உபதேசம் என சூப்பர் ஸ்டாரை வறுத்தெடுக்கும் பிரபலம்

Super Star Rajini: தற்போது இணையத்தில் காரசாரமாக பேசப்பட்டு வரும் விஷயம் ஜெயிலர் படத்தை பற்றி தான். இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஒரு பக்கம் ரஜினியை விமர்சித்தும் நிறைய கருத்துக்கள் வெளியாகி
வருகிறது.

அந்த வகையில் பிரபலம் ஒருவர் மீண்டும் மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுக்கும் படியாக கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதாவது சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தான் தொடர்ந்து ரஜினியை கேலி, கிண்டல் செய்யும் விதமாக பதிவு போட்டு வருகிறார்.

Also Read: அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட ஜெயிலர் உரிமம்.. 5 மடங்கு நஷ்டத்தை சந்திக்கும் கலாநிதி மாறன்

சமீபத்தில் ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் காக்கா மற்றும் பருந்து கதையை ரஜினி கூறியிருந்தார். இதிலிருந்து ரஜினியை பருந்து என்று விமர்சித்து வரும் ப்ளூ சட்டை இப்போது ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதாவது ஆரம்பத்தில் ரஜினிக்கு பல கெட்ட பழக்கங்கள் இருந்ததாக அவரை ஒற்றுக் கொண்டுள்ளார். மேலும் தன்னை அன்பால் திருத்தியது மனைவி லதா என்று பல மேடைகளில் ரஜினி கூறி இருக்கிறார்.

அதேபோல் ரசிகர்களும் மது பழக்கத்தை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து ரஜினி வலியுறுத்தி வருகிறார். அதை விமர்சிக்கும் படியாக ப்ளூ சட்டை மாறன், ஊருக்கு உபதேசம் பண்ணும் ரஜினி பார்ல சகவாசம் வைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார். சரக்கடிக்க வேண்டாம் என்று சமீபகாலமாக பவ்யமான பருந்து கேட்டு வருகிறது.

Also Read: ஜெயிலர் ரிலீஸ் வைத்து அக்கப்போர் பண்ணும் பிரபல நிறுவனம்.. இப்படி எல்லாம் ஒரு விளம்பரம் தேவையா!

ஆனால் நிஜத்தில் அவர் செய்து கொண்டிருக்கும் செயல் வேறு விதமாக உள்ளது. தலைநகரில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் பனை தோப்பு ஹோட்டலுக்கு அருகே ரஜினிக்கு சொந்தமாக ஒரு ஹோட்டல் இருக்கிறது. மேலும் தனது ஒரு படத்தின் டைட்டிலை தான் இந்த ஹோட்டலுக்கு பெயராக வைத்திருக்கிறார். தற்போது அதை பராமரிக்க முடியாத காரணத்தினால் வேறு ஒருவரிடம் கைமாற்றி இருக்கிறார்.

ஆனால் இப்போது அங்கு நூலகமும் அல்லது இலவச மருத்துவமனையோ இல்லை. இதற்கு மாறாக மது பிரியர்கள் வந்து செல்லும் பார் என்பது தான் இதில் ஹைலைட் என ப்ளூ சட்டை விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடைய இடத்திலேயே பார் நடத்துவதற்கு பருந்து அனுமதி கொடுத்திருக்கிறார். இவ்வாறு வெளியில் ஒரு வேஷமும், உள்ளே ஒரு வேஷம் என இரட்டை வேஷம் ரஜினி போடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Also Read: ரஜினியை விடாமல் சீண்டி பார்ப்பதே வேலையா போச்சு.. சூப்பர் ஸ்டாரின் இமேஜை பங்கம் பண்ண ப்ளூ சட்டை

Trending News