செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இளையராஜாவுடன் இதுவரை சேராத பிரபலம்.. கட்டாயப்படுத்தி கூட்டணி அமைத்த மிஷ்கின்

தமிழ் சினிமாவை தன்னுடைய மெல்லிய இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் இளையராஜா எப்போதுமே தனக்கு ஏற்ற நபர்களை தான் தன்னுடைய குழுவில் வைத்திருப்பார். அதாவது எப்பொழுதுமே நல்ல குணங்கள் நிறைந்த தன்னடக்கத்துடன் இருக்கும் திறமையானவர்களுக்கு அவர் அதிக முன்னுரிமை கொடுப்பார்.

இதுவரை அவருடைய குழுவில் அப்படிப்பட்ட நபர்கள்தான் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால் இதுவரை அவருடன் இணையாத ஒரு பிரபலம் முதல்முறையாக இளையராஜாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இயக்குனர் மிஷ்கினுக்காக தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கும் இளையராஜா ஒரு பிரபலத்தை தன்னுடைய இசையில் முதன்முதலாக பாட வைத்திருக்கிறார்.

Also read : இளையராஜா இசை அமைக்காத ஒரே நடிகரின் படம்.. 40 வருட சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த ஆச்சரியம்

இளையராஜா, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் இசையமைத்துள்ளார். அந்த படத்தில் அவருடைய இசையில் பாடகர் சித் ஸ்ரீராம் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஏராளமான திரைப்படங்களில் பாட்டு பாடி இருக்கும் இவர் ஒரு திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

இயல்பாக பாட்டு பாடும் போது இவர் எப்போதுமே வித்தியாசமாக நடந்து கொள்வார். மேலும் இவருடைய பாவனைகளும், உச்சரிப்புகளும் கூட பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாகத்தான் தெரியும். அப்படிப்பட்ட இவருடன் சேர்ந்து இளையராஜா ஒரு படத்தில் பணியாற்றி இருப்பது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Also read : இளையராஜா பாஞ்சாயத்து கூட்டின 4 பெரும் புள்ளிகள்.. காதில் கூட கேட்காத ஏ ஆர் ரகுமான்

ஆனால் உண்மையில் இளையராஜா முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் மிஷ்கின் தான் அவரை சமாதானப்படுத்தி இப்படி ஒரு கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார். இதைப்பற்றி கூறும் மிஷ்கின் பல போராட்டங்களுக்கு பின்பு தான் இளையராஜா சித் ஸ்ரீராமை தன்னுடைய இசையில் பாட அனுமதித்தார் என்று கூறியிருக்கிறார். இருப்பினும் படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் பூர்ணா, அஜ்மல் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனாலேயே இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Also read : இளையராஜாவுக்கு கொடுத்த பதவி.. நான் என்ன தக்காளி தொக்கா என கடுப்பான கங்கை அமரனின் முடிவு

Trending News