சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மகுடிக்கு மயங்கிய பாம்பான நடிகர்.. இஷ்டத்துக்கு வளைக்கும் மனைவி

ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியான நட்சத்திர தம்பதிகள் பற்றிய பேச்சு தான் இப்போது திரை உலகில் கடுமையாக புகைந்து கொண்டிருக்கிறது. மனைவி மேல் தீரா காதலில் இருக்கும் நடிகர் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட குழந்தைகளின் படிப்பு என சென்டிமென்ட் ஆக உருட்டி புருஷனை அக்கட தேசம் மனைவி அழைத்துச் சென்றார். அங்கு சில பட வாய்ப்புகளை பிடித்த நடிகை கணவருக்கும் ஒரு வாய்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சில பிசினஸ் டீலையும் ஓகே செய்து இருக்கிறார். இதனால் நடிகர் இந்த பக்கம் வரமாட்டார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மாஸ் ஹீரோ சினிமாவை விட்டு விலகப் போகும் செய்தி மனைவி நடிகையை குஷியாக்கி இருக்கிறதாம்.

Also read: குழப்பத்தை ஏற்படுத்த போடும் திட்டம்.. முழு அரசியல்வாதியாக மாறிய நடிகர்

ஏற்கனவே பைக் ஹீரோ சினிமாவில் நாட்டம் இல்லாமல் இருந்து வருகிறார். இப்படி முதல் இரண்டு இடத்தில் இருந்த தடை தானாகவே விலகி இருக்கிறது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட மனைவி கணவரிடம் இதுதான் நல்ல சமயம். முதல் இடத்தை நீங்கதான் பிடிக்கணும் என மந்திரம் ஓதி வருகிறாராம்.

இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த ஜோடி மீண்டும் பிறந்த வீடு வரலாம் என்கிறது திரையுலக வட்டாரம். அதிலும் நீண்ட நாட்களாக இழுபறியில் கிடக்கும் படத்தையும் முதலில் முடித்து கொடுத்து விடுங்கள் என மனைவி கூறியிருக்கிறாராம்.

ஏனென்றால் விருது ஹீரோ தற்போது அதில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. அது நடக்க கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் மனைவி கணவருக்கு அதிக பிரஷர் கொடுத்து வருவதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read: வாரிசு நடிகரை மணக்கும் ஹீரோயின்.. குடும்ப டார்ச்சரால் எடுத்த முடிவு

Trending News