புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கண்ணனை தண்டித்த நேரத்தில் பிறந்த குழந்தை.. மீண்டும் குவா சத்தம் கேட்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் இறுதி கட்டத்தை நோக்கியதால் ஒவ்வொரு விஷயங்களும் விறுவிறுப்பாக வெளி வருகிறது. அதில் கண்ணன் ஐஸ்வர்யா செஞ்ச ஆடம்பரத்துக்கு கண்டிப்பாக அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக ஒரு சீன் வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பேர் ஆனந்தமாக கண்ணன் போலீஸிடம் பிடிபட்டு விட்டார்.

இதை கேட்ட அதிர்ச்சியில் மொத்த குடும்பமும் இருக்கிறது. இருந்தாலும் கண்ணன் இந்த மாதிரி தவறுகள் செய்வதற்கு வாய்ப்பில்லை என்று கதிர் விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். ஆனால் திரும்பி வீட்டுக்கு வந்த கதிர் குடும்பத்தில் உள்ளவரிடம் அவனுடைய டிராவில் இருந்து தான் பணத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.

Also read: ஜீவானந்தத்தின் பிளானை நோட்டமிடும் கௌதம்.. நாளா பக்கமும் அடிவாங்கும் குணசேகரன்

அது மட்டுமில்லாமல் கண்ணன் ஏற்கனவே பலமுறை லஞ்சம் வாங்கி இருப்பதாக சொல்கிறார். இதனால் கண்ணனை வெளியில் எடுப்பது முடியாது என்கிறார். இதைக் கேட்ட அதிர்ச்சியில் ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி வந்து விடுகிறது. உடனே அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து போகிறார்கள்.

அங்கே ஆப்ரேஷன் முடிந்த பிறகு இவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. பிறகு மூர்த்தி ஐஸ்வர்யாவை பார்க்க வந்த பொழுது, எண்களை மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்கிறார். அதற்கு மூர்த்தி கண்ணன் செய்த தப்புக்கு நீ என்ன பண்ணுவ, உன்னையும் உன் குழந்தையும் நாங்க பார்த்துகிறோம் என்று வாக்குறுதி கொடுக்கிறார்.

Also read: பாக்யாவை பழிவாங்க சவால் விடும் ராதிகா.. கோபிக்கு அசிங்கபடுவதே வேலையா போச்சு

இதை பார்க்கும் பொழுது இப்போதைக்கு கண்ணன் வெளியில் வரப் போவதில்லை. ஆனால் கண்ணன் இந்த அளவுக்கு போனதற்கு முக்கிய காரணமே ஐஸ்வர்யா தான். கடைசியில் மாட்டிக்கொண்டது கண்ணன். இதைத்தான் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப கூடாது என்று சொல்வார்கள். இல்லையென்றால் இப்படித்தான் வாழ்க்கை அமையும்.

அடுத்ததாக இன்னும் இந்த நாடகத்தில் மீதம் இருக்கிறது இரண்டு விஷயங்கள். ஒன்று தனத்தின் மார்பக புற்றுநோய் ஆபரேஷன், அடுத்ததாக ஜீவா மீனா மறுபடியும் இந்த குடும்பத்துடன் சேர்வதற்கான காட்சிகள். அதன் பின் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையாக புது வீட்டில் கிரகப்பிரவேசம் பண்ணி சந்தோசமாக இருக்கப் போகிறார்கள். அத்துடன் இந்த நாடகத்திற்கு சுபம் போட்டு முடித்து விடுவார்கள்.

Also read: டிஆர்பியில் முந்த ‘எதிர்நீச்சல்’ குணசேகரனுக்கு விஜய் டிவி விரித்த வலை.. எந்த சீரியலுக்கு தெரியுமா?

Trending News