திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஏஆர் ரகுமானை அடிபணிய வைக்கத் துடிக்கும் சினிமா.. இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை

மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழி படங்களிலும் இசை அமைத்து தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். மேலும் பாலிவுட்டில் முக்கிய இசையமைப்பாளராக மாறினார்.

தற்போது மிக பிஸியாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் தமிழில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் ஏஆர் ரஹ்மானுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read : அசைக்க முடியாத இடத்தில் ஏ ஆர் ரகுமான்.. இந்த விஷயத்தில் இளையராஜாவையும் முந்தினார்

அதாவது முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எப்படியாவது ஏஆர் ரகுமானை தனது படத்தில் பணியாற்ற வைக்க வேண்டும் என காத்துக் கிடக்கிறார்கள். ஆனால் பாலிவுட் சினிமாவில் ஏஆர் ரஹ்மானுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் ஹாலிவுட் வரை சென்று பல விருதுகளை ஏ ஆர் ரகுமான் பெற்றுள்ளார். அப்போது இரண்டு ஆஸ்கர் விருதினை கையில் வைத்துக்கொண்டு எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசி இருந்தார். இது தமிழ் மக்களுக்கு பெருமையாக இருந்தாலும் மற்ற மொழி மக்கள் சற்று அதிருப்தியில் இருந்துள்ளனர்.

Also Read : இளையராஜா நினைச்சிருந்தா ஏ ஆர் ரகுமான் காணாம போயிருப்பாரு.. பகிர் கிளப்பிய பிரபலம்

இதன் வெளிப்பாடு காரணமாகவே தற்போது ஏ ஆர் ரஹ்மானுக்கு வாய்ப்பு மறுப்பதாக கூறப்படுகிறது. அதாவது பாலிவுட்டில் நெபோடிசம் தலைதூக்கி உள்ளதாக சமீபத்தில் அதிகமாக பேசப்படுகிறது. சுஷாந்த் சிங் தற்கொலைக்குக் கூட இதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

மேலும் பாலிவுட்டில் ஹிந்தி மொழியில் நடிகர்களே வளரக் கூடாது என்று நினைக்கையில் தமிழனாக ஏஆர் ரகுமானுக்கு அங்கு வாய்ப்பு கொடுக்க அனைவரும் மறுக்கின்றனர். இதனால் தற்போது ஏ ஆர் ரகுமான் ஹிந்தி மொழியைத் தவிர மற்ற மொழி படங்களில் இசை அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

Also Read : ஏ.ஆர்.ரஹ்மான் எங்க அப்பாவின் கால் விரலுக்கு சமம்.. அவமானப்படுத்திய பிரபல நடிகர்!

Trending News