வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித்துக்கு புடிச்சா எனக்கும் புடிக்கணுமா? முரண்டு பிடிக்கும் இயக்குனர்.. விடாமுயற்சிக்கு விடாமல் விழும் அடி

Vidaamuyarchi: முன்பெல்லாம் முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கும் இயக்குனர்கள், அந்த ஹீரோக்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்வார்கள். ஆனால் இப்போது வரும் இளம் இயக்குனர்கள் அப்படி கிடையாது. அவர்கள் நினைத்த கதை, காட்சி அப்படியே வர வேண்டும் என்பது ரொம்ப உறுதியாக இருக்கிறார்கள். ரஜினி, கமல் போன்றவர்கள் கூட இளம் இயக்குனர்கள் படத்தில் நடித்தாலும் இதுதான் நிலைமை.

இப்படி ஒரு பிரச்சனையில் தான் இப்போது நடிகர் அஜித்குமார் கூட சிக்கி இருக்கிறார். அஜித் தற்போது தன்னுடைய 62 ஆவது படமான விடாமுயற்சி படத்திற்காக ஷூட்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். வித்தியாசமான கதைகளின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்ற, மகிழ்திருமேனி தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் தான் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு அஜித்தை ரொம்ப இளமையாக காட்ட இருக்கிறார்கள். இதற்காக அஜித் கிட்டத்தட்ட 10 கிலோ வரை எடையை குறைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் மீண்டும் அஜித்தை ஒரு ரொமான்ஸ் ஹீரோவாக பார்க்கலாம்.

Also Read:அஜித் கிட்ட விட்டதை பிரதீப் கூட்டணியில் எடுக்கப் போகும் விக்கி.. SJ சூர்யா வெளியிட்ட பதிவு

விடாமுயற்சி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுபவர் இந்திய சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளராக இருக்கும் நீரவ் ஷா. இவர் முதன்முதலில் அஜித்தின் கிரீடம் படத்தில் பணியாற்றினார். கதை தொடர்ந்து பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித்தின் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அஜித்தின் அதிக நம்பிக்கையை பெற்றவர்.

அப்செட் ஆன அஜித்குமார்

விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே உங்களுக்கு எந்த டவுட் இருந்தாலும் நீரவ் ஷாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என அஜித் சொன்னது மகிழ் திருமேனிக்கு பிடிக்கவில்லை படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து இவர்கள் இரண்டு பேருக்கும் சில விஷயங்கள் செட் ஆகவில்லை அஜித்துக்கு பிடித்த ஒளிப்பதிவாளராக இருந்தால் எனக்கும் பிடிக்க வேண்டுமா என மகிழ் திருமேனிக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது.

ஒரு கட்டத்தில் இந்த கேமராமேன் எனக்கு வேண்டாம் என சொல்லிவிட்டார். இப்போது ஓம் பிரகாஷ் தான் விடாமுயற்சி படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். அஜித்திற்கு இதில் மிகப்பெரிய மன வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. என்ன ஆனாலும் படம் நன்றாக வந்தால் போதும் என நினைத்து அமைதியாகிவிட்டார்.

Also Read:அஜித், விஜய் படத்தை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி கூறிய காரணம்.. கேப்பில் ஸ்கோர் செய்த த்ரிஷா

Trending News