வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

என் கட்சி வெளியே போ, சீமான் ஆவேசம்.. அண்ணனை எதிர்க்கும் தம்பிகள்!

Seeman: இது என் கட்சி வெளியில போ, ஒரு மாவட்ட நிர்வாக பொறுப்பாளரை பார்த்து கட்சியின் தலைவர் சொன்னால் எப்படி இருக்கும். இதுதான் நேற்று நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி மாவட்டத்தின் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் பர்வீன் தன்னை தன் கட்சியின் தலைவர் சீமான் ஒருமையில் பேசி வெளியே அனுப்பியதாக ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அத்தோடு சேர்ந்து சாட்டை முருகன் அடிக்க வந்ததாகவும் சொல்லி இருக்கிறார்.

அண்ணனை எதிர்க்கும் தம்பிகள்!

சமீப காலமாகவே நாம் தமிழர் கட்சியில் உட் கட்சி பூசல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முக்கியமான பல மாவட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகத் தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக கட்சி நிர்வாகிகள் சிலரை சீமான் ரொம்ப தரக்குறைவாக பேசுவது போல் ஆடியோக்கள் வெளியாக ஆரம்பித்தது.

ஒரு பக்கம் நாம் தமிழர் கட்சியை ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்காக கட்சி நிர்வாகிகளை கலைக்க வெளியில் இருந்து வேலை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் சீமான் கட்சியை விட்டு யார் போனாலும் எனக்கு கவலை இல்லை, யாரை நம்பியும் என் கட்சி இல்லை என்ற மனப்போக்குடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சீமான் தன்னுடைய கட்சியை பலப்படுத்துவதை விட்டுவிட்டு இப்படி ஒரு நடவடிக்கையை எதற்காக எதிர்கொண்டு இருக்கிறார் என தெரியவில்லை.

அதே நேரத்தில் மூன்றாவது வளர்ந்து வரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கும்பொழுது, தற்போது நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் நாம் தமிழர் கட்சி அஸ்திவாரம் விரிசல் அடைவது சீமானுக்கு நல்ல பலனை கொடுக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Trending News