Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

உங்க பாசத்துல துக்கம் தொண்டை அடைக்குது.. IPS சந்தியா பரீட்சை எழுதுற இடத்தில் நடந்த சில்மிஷம்

உங்க பாசத்துல துக்கம் தொண்டை அடைக்குது.. IPS சந்தியா பரீட்சை எழுதுற இடத்தில் நடந்த சில்மிஷம்

விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கனடவுடன் இருக்கும் சந்தியா, தற்போது மாமியார் சிவகாமியின் சம்மதத்துடன் பரிச்சை எழுத இருக்கிறார். அவரை பரீட்சை எழுதவிடாமல் செய்வதற்காக கர்ப்பிணியாக இருக்கும் அர்ச்சனா, தனக்கு வயிறு வலிப்பது போல் […]

விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கனடவுடன் இருக்கும் சந்தியா, தற்போது மாமியார் சிவகாமியின் சம்மதத்துடன் பரிச்சை எழுத இருக்கிறார். அவரை பரீட்சை எழுதவிடாமல் செய்வதற்காக கர்ப்பிணியாக இருக்கும் அர்ச்சனா, தனக்கு வயிறு வலிப்பது போல் நாடகமாடுகிறார்.

இதனால் பதட்டத்தில் அனைவரும் அர்ச்சனாவை கவனிப்பதால் சந்தியா எப்படி தேர்வு அறைக்கு செல்வது என தடுமாறுகிறார். அதன் பிறகு வீட்டிற்கு வரும் சரவணன் சந்தியாவை தனது இருசக்கர வாகனத்தின் மூலம் பத்திரமாக தேர்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

பிறகு அங்கு பரிட்சை எழுதும் அனைவரையும் தேர்வு எழுதுவதற்கு முன் பரிசோதிக்கின்றனர். இதில் பெண்களை ஆண் கண்காணிப்பாளர் பரிசோதிப்பதால் அவர்களுக்குள் சலசலப்பு ஏற்படுகிறது. இதற்காக தனியாக ஒரு பெண் கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கலாம் என தேர்வு எழுத வந்திருக்கும் பெண்கள் நினைக்கின்றனர்.

மேலும் அந்த ஆண் நபர் பெண்களை தவறான இடத்தில் தொடர்வதாகவும், அதை வீடியோவாக பதிவு செய்வதால் வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டுகிறாராம். இதை ஒரு பெண் வெளியே வந்து சந்தியாவிடம் அழுதுகொண்டே சொல்கிறது.

உடனே சந்தியா வழக்கம்போல் அந்த ஆண் கண்காணிப்பாளரை அங்கு இருக்கும் போலீசாரிடம் புகார் அளித்து பிடித்துக் கொடுக்கிறார். இப்படிப் படிக்காமலேயே ஐபிஎஸ் வேலையை அசால்டாக பார்க்கும் சந்தியா, எதற்காக பரிச்சை எழுத வேண்டும்.

‘இப்பவே அவர் போலீஸ் தான்’ என நெட்டிசன்கள் கிண்டல் எடுக்கின்றனர். மேலும் இந்த நாடகத்தில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என சந்தியா செய்யும் அலப்பறையை பார்த்தால் நிஜமாகவே ஐபிஎஸ் ஆவதற்காக படிப்பவர்களை காண்டேற்றுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.