வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கல்யாணமாகி ரெண்டு மாசத்திற்குள் இப்படி ஒரு மோதலா.? இரு துருவங்களாகும் அசோக், கீர்த்தி ஜோடி

Ashok Selvan Keerthy Pandian: சினிமாவை பொருத்தவரை தன்னுடன் நடித்த சக நடிகர்கள் நடிகைகளை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக தான் இருந்து வருகிறது. அந்த வகையில் பலருக்கும் குடும்ப வாழ்க்கை கை கொடுத்து இருக்கிறது. இதில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனும் இணைந்து விட்டார்கள்.

இவர்கள் நடித்த ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்தது மூலம் இவருடைய காதல் பூத்துக் குலுங்கி விட்டது. அடுத்து இரு வீட்டார்கள் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக செப்டம்பர் 13ஆம் தேதி நடந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் சேர்ந்து கொடுத்த பேட்டிகளில் இவர்களுக்குள் இருக்கும் மனப்பொருத்தத்தை பார்க்க முடிந்தது.

ஆனால் கீர்த்தி பாண்டியன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த கொஞ்ச படங்களிலேயே திருமணம் செய்தால் இவருடைய கேரியர் பாதிக்கப்படுமா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் குடும்பம் வேற தொழில் வேற என்பதை சரியாக புரிந்து கொண்டு, அடுத்தடுத்த படங்களில் நடிக்கப் போவதாக கீர்த்தி பாண்டியன் கூறியிருந்தார்.

Also read: சின்ன தூண்டில்ல மொத்த கஜானாவையும் ரொப்பிய 5 படங்கள்.. ஜம்முனு செட்டிலான அசோக் செல்வன்

அதே மாதிரி அசோக் செல்வனுக்கும் போர் தொழில் படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகிறது. இப்படி இருக்கும் சமயத்தில் கல்யாணம் ஆகி மூன்று மாதங்களிலே இவர்களுக்குள் இப்படி ஒரு மோதலா? என ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு விஷயம் நடக்கப் போகிறது. அதாவது இந்த இரண்டு ஜோடிகளும் தற்போது நடிப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகிய சபாநாயகன் படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படத்தை விஸ்வரூபம் படத்தை எடுக்கும் பொழுது கமலுக்கு உதவியாக இருந்த சி எஸ் கார்த்திகேயன் என்பவர் இயக்கி இருக்கிறார். மேலும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். அதே மாதிரி இவருடைய மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி படமும் வருகிற டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

இப்படி ஒரே நாளில் கணவன் மனைவிகள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகி மோதிக் கொள்ளப் போவது எந்த அளவிற்கு சாத்தியமாக இருக்கப் போவது என்று தற்போது சினிமா வட்டாரத்துக்குள் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இந்த ஒரு விஷயத்தால் இவருக்குள் மனக்கசப்பு எதுவும் ஏற்படாமல் இருந்தால் திருமண பந்தம் இனிதாக அமையும்.

Also read: அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு.. தன்னம்பிக்கையால் சாதித்த நடிகை

Trending News