வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

உங்க வீட்டு பெண்களோட இந்த படத்தை போய் பாருங்க வெற்றிமாறன்.. பேட் கேர்ள் டீசரால் கிளம்பிய சர்ச்சை

Bad Girl: வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள பேட் கேர்ள் பட டீசர் சமீபத்தில் வெளிவந்தது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த வர்ஷா பரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதன் டீசர் வெளியீட்டின் போது மிஷ்கின் பேசியது பிரச்சனையானது. அதேபோல் படத்தின் இயக்குனர் பெண்கள் பற்றி முன்வைத்த கருத்தும் சர்ச்சையாக வெடித்தது.

அதைத்தொடர்ந்து வெளியான டீசரை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி தான். அதில் இன்றைய தலைமுறை எப்படி எல்லாம் சீரழியலாம் என சொல்வது போல் இருந்தது ஒவ்வொரு காட்சியும்.

பள்ளியில் படிக்கும் பெண் என்னுடைய இஷ்டத்துக்கு தான் இருப்பேன் என அடிக்கும் லூட்டி முகம் சுளிக்க வைத்தது. அதிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பின் இப்படியெல்லாம் செய்கிறார் என்பது போல இயக்குனர் காட்டி இருந்தார்.

பேட் கேர்ள் டீசரால் கிளம்பிய சர்ச்சை

இதுதான் இப்போது கடும் விவாதமாக மாறி இருக்கிறது. வெற்றிமாறன் மேல் இருந்த மரியாதையே போய்விட்டது என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அது மட்டும் இன்றி சில இணையவாசிகள் உங்க வீட்டு பெண்களோட இந்த படத்தை பார்க்க முடியுமா? அதுவும் உங்க மகளோட படத்தை தியேட்டரில் பாருங்கள் வெற்றிமாறன் என கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்படி டீசரே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்றால் படத்தில் என்னென்ன காட்சிகள் இருக்குமோ என்ற பதட்டமும் இருக்கிறது.

தற்போது இந்த படத்திற்கு எதிராக கருத்துக்கள் பரவி வரும் நிலையில் தடை செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளது.

Trending News