திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

சாமி வேற சயின்ஸ் வேற.. கண்ணகியால் வெடிக்கும் சர்ச்சை, மூடநம்பிக்கைக்கு பதிலடி

Kannagi: எந்த காலத்துல இருக்கீங்க, இப்ப காலமே மாறிடுச்சுன்னு சொன்னாலும் ஒரு சில விஷயங்கள் மாறாமல் இன்னும் அப்படியே தான் இருக்கு. அது பல பேருக்கு கலாச்சாரமாகவும் சில பேருக்கு மூடநம்பிக்கையாகவும் இருக்கு. அப்படி ஒரு மூடநம்பிக்கையை பத்தி பேசுற படம் தான் கண்ணகி.

யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் நாளை வெளிவர இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே இப்போது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி ஒரு புது சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது.

அதாவது பல போராட்டங்களுக்குப் பிறகு அம்மு அபிராமிக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால் அந்த நாளில் அவருக்கு மாதாந்திர பிரச்சனை வந்து விடுகிறது. திருமணம் நடப்பது கோவிலில். இதனால் என்ன செய்வது என்று அவர் தடுமாறுகிறார். அதை அடுத்து அவருடைய அம்மா மௌனிகா தைரியமான ஒரு முடிவை எடுக்கிறார்.

Also read: இருண்டு போன 4 பெண்களின் புரட்சி போராட்டம்.. வன்மத்தை எரிக்கப் போகும் கண்ணகி ட்ரெய்லர்

என்னவென்றால் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் பெண்ணை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்து மணமேடையில் அமர வைக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது சில சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பக்கம் இப்படி ஒரு விஷயத்தை தைரியமாக காட்சிப்படுத்திய இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் நாளை படம் வெளிவந்த பிறகு இது நிச்சயம் ஒரு பிரச்சினையாக கிளம்பும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் சினிமாவுக்கு சரியாக இருக்கும் விஷயம் நடைமுறைக்கு ஒத்து வராது. இப்படி ஒரு சூழ்நிலையில் நடக்கும் திருமணத்திற்கு பிறகு சடங்கு, சம்பிரதாயங்கள் செய்வது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அந்த வகையில் ஒரு சிலர் இதை ஆதரித்தாலும் ஒரு கூட்டம் கலாச்சாரத்தை வைத்து நிச்சயம் பிரச்சினையை ஆரம்பிக்க தான் பார்ப்பார்கள். சாமி வேற சயின்ஸ் வேற என்பது பலருக்கும் புரிவதில்லை. அதைத்தான் இயக்குனர் தைரியத்துடன் சொல்லி இருக்கிறார். இது நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.

Also read: லோகேஷுடன் நேருக்கு நேர் மோதும் மன்சூர்.. டிசம்பர் 15-ஐ குறிவைக்கும் 8 படங்கள், வெற்றி யாருக்கு.?

Trending News