வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மதக்கலவரத்தை தூண்டும் இசைவாணி.. துணை போகிறாரா பா ரஞ்சித்.? வலுக்கும் சர்ச்சை

Pa.Ranjith: திரைத்துறையில் ஏகப்பட்ட சர்ச்சைகள் அடுத்தடுத்து கிளம்பி வருகிறது. அதில் பிக் பாஸ் புகழ் இசைவாணி பாடிய பாடல் பெரும் சர்ச்சையாக வெடித்து தற்போது கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறது.

ஐ அம் சாரி ஐயப்பா உள்ளே வந்தால் என்னப்பா என பா ரஞ்சித் இசைக்குழுவில் உள்ள இசைவாணி சமீபத்தில் பாடல் பாடியிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவிய நிலையில் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் இப்படி ஒரு பாடலை அவர் பாடி இருப்பது மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளது.

மேலும் ஐயப்ப பக்பாடியதர்களின் சேவா சங்கம் சார்பாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் கழுத்தில் சிலுவை அணிந்து கொண்டு இயேசுவைப் பற்றி மேடைகளில் பாடல் பாடி இருக்கிறார். அதேசமயம் ஐயப்ப சாமியை பற்றி இழிவாக பாடியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

மதக்கலவரத்தை தூண்டும் பா ரஞ்சித்

மேலும் பா. ரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது. தற்போது போலீசார் இதை விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இசைவாணிக்கு கொலை மிரட்டல்கள் தொலைபேசி வழியாக வருவதாக அவர் பாதுகாப்பு மனு ஒன்றையும் கொடுத்துள்ளார்.

இப்படி இந்த விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இசைவாணிக்கு எதிராக பலரும் கொந்தளித்து வருகின்றனர். கடவுளை அவமதிக்கும் வகையில் பாடல் பாடியவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை எனவும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உண்மையில் இப்பாடல் 6 வருடங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. இசைவாணியும் பல மேடைகளில் பாடியிருக்கிறார். ஆனால் இப்போது சோஷியல் மீடியாவின் ஆதிக்கம் நிறைந்து இருக்கிறது. அதிலும் கார்த்திகை மாத சமயத்தில் இந்த பாடலை பாடியதுதான் சர்ச்சைக்கு காரணமாக உள்ளது.

Trending News