சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

போஸ்டரே இப்படி இருக்கு, படத்துல என்னென்ன இருக்குமோ.? அஜித்தால் கிளம்பிய பஞ்சாயத்து

Ajith: அஜித்தின் விடாமுயற்சி இப்போது ரிலீஸ் ஆகுற மாதிரி தெரியலை. அதனாலேயே அவர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் குட் பேட் அக்லியில் நடிக்க சென்று விட்டார்.

தமிழக தேர்தல் முடிந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதன் படி ஹைதராபாத்தில் நடந்த இந்த சூட்டிங்கில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் நேற்று பட குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்தது. அதில் அஜித் மூன்று விதமான முகபாவனையில் இருந்தார்.

அஜித்தால் கிளம்பிய சர்ச்சை

மேலும் ஜிகுஜிகு சட்டை, கலர் கண்ணாடி என சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்தார். ஆனால் அதில் தான் ஒரு புது பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது.

அதாவது அந்த போஸ்டரில் ஒரு அஜித் நடுவிரலை காட்டியபடி போஸ் கொடுத்திருந்தார். ஆனால் அது பிளர் செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் அது எந்த மாதிரியான போஸ் என பார்ப்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது.

இதைத்தான் நெட்டிசன்கள் அஜித் இதை கூடவா கவனிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை அந்த கதாபாத்திரத்திற்கு அது தேவையானதாக இருந்திருக்கலாம்.

அதனாலேயே இப்படி ஒரு போஸ்டரை உருவாக்கி இருப்பார்கள். அதன் பிறகு அஜித் அது வேண்டாம் என்று நினைத்ததாலேயே பிளர் செய்யப்பட்டிருக்கும் என ஒரு தரப்பு சப்போர்ட் செய்து பேசி வருகின்றனர்.

ஆனால் போஸ்டரே இப்படி பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறது. இதில் படத்தில் என்னென்ன காட்சிகள் இருக்குமோ தெரியவில்லை என விமர்சகர்கள் ஒரு பக்கம் புலம்பி வருகின்றனர்.

Trending News