Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதி கேட்டுக்கொண்டபடி பாண்டியன் 3 மகன்கள் பொண்டாட்டிகளுடன் சேர்ந்து ஹனிமூன் போவதற்கு சம்மதத்தை கொடுத்து விட்டார். இதை கேட்டதும் கோமதிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அடுப்பங்கரையில் சமையல் பண்ணிக்கிட்டு இருக்கும் பொழுது பாட்டு பாடி கொண்டே சமையல் செய்கிறார்.
இதை உள்ளே வந்து பார்த்த பாண்டியன், கோமதி இடம் பாசமாக உனக்கு இப்பொழுது சந்தோசமா? உன் ஆசை தான் எனக்கு ரொம்ப முக்கியம். உன்னை சந்தோசமாக வைக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன். அதனால் தான் அவர்களை வெளியூருக்கு அனுப்புவதற்கு ஓகே சொல்லி இருக்கிறேன். அதே மாதிரி நாமும் வெளியிலே எங்கேயாவது போகலாமா என்று கோமதியிடம் கேட்கிறார்.
கோமதியின் ஆசையை நிராகரிக்கும் மருமகள்
அதற்கு கோமதி ரொம்ப தான் உங்களுக்கு ஆசை என்று சொல்லிய நிலையில் பாண்டியன் நாம் எங்கேயாவது கோயிலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்கிறார். இப்படி கோமதிடம் ரொமான்ஸ் பண்ணி பாண்டியன் சந்தோஷமாக பேசிக் கொள்கிறார். இதனை தொடர்ந்து சரவணன் சந்தோஷமாக இருக்கிறார். இதை பார்த்த தங்கமயில், சரவணன் இடம் நாம் தனியாக எங்கேயாவது போனால் தான் நன்றாக இருக்கும்.
அதனால் நாம் ஆசைப்பட்ட மாதிரி நம்ம சென்னைக்கு போகலாம். மீனாவும் ராஜியும் அதே மாதிரி தனித்தனியாக வேற ஏதாவது ஒரு ஊருக்கு போய்ட்டு வரட்டும் என்று சொல்கிறார். அதற்கு சரவணன் அதெல்லாம் இல்ல, நம்ம மூணு பேரும் சேர்ந்து போகலாம். நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணலாம். நானும் என் தம்பிகளுடன் சின்ன வயசுல வெளியூர் போனது. இப்போ ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது அதனால் செம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரலாம் என்று சந்தோஷத்துடன் தங்கமயிலிடம் சொல்லுகிறார்.
அதற்கு தங்கமயில், ஒருவேளை நம் கூட வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது. மாமா சொன்னதுக்காக சரி என்று கூட சொல்லி இருக்கலாம். அதனால் நம் மட்டும் தனியாக போகலாமா என்று கேட்கிறார். அதற்கு சரவணன் அப்படி எல்லாம் ஒன்னும் என் தம்பிகள் நினைக்க மாட்டாங்க. நாம் சேர்ந்து போகலாம் என்று சொல்கிறார்.
அடுத்ததாக மீனா மற்றும் செந்தில் அவர்களுடைய ரூமில் பேசிக் கொள்வது ஏனென்றால் நாம் இந்த ஹனிமூன் போக வேண்டாம். அதுவும் சென்னை அந்த அளவுக்கு செட்டாகாது. இப்பொழுது மழை தான் அங்கே அதிகமாக இருக்கிறது. அது மட்டும் இல்ல நாம் போனால் தங்கமயில் அக்காக்கும், சரவணன் மாமாவுக்கும் தொந்தரவாக இருக்கும். நாம் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று மீனா, செந்தில் இடம் சொல்கிறார்.
உடனே செந்திலும் சரி நாம் போக வேண்டாம் அப்பாவிடம் இதைப் பற்றி காலையில் பேசிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அதே மாதிரி ராஜி, இப்போதுதான் டியூஷன் எடுக்க ஆரம்பித்திருக்கிறோம். அதற்குள் லீவு போட்டால் சரிப்பட்டு வராது. எப்படியாவது சென்னைக்கு போகாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அந்த நேரத்தில் கதிர் வந்த பொழுது சென்னைக்கு கண்டிப்பாக நாம் போகணுமா என்று கேட்கிறார்.
அதற்கு கதிர், ஏன் உனக்கு சென்னைக்கு போக பிடிக்கலையா என்று கேட்கிறார். ஆமாம் இப்போது எனக்கு போக தோணவில்லை என்று சொல்லிய நிலையில் கதிரும் எனக்கும் தான் போக இஷ்டமில்லை என்று சொல்கிறார். அப்பொழுது நீ அங்க வச்சே மாமா கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல என்று ராஜி கேட்கிறார். இல்ல உனக்கு ஒருவேளை ஆசையாக இருந்துச்சுன்னா அது என்னால தடைப்பட்டு போய் விடக்கூடாது. அதனால் தான் நான் எதுவும் சொல்லவில்லை என்று சொல்கிறார்.
பிறகு இவர்கள் இருவருக்கும் போக இஷ்டம் இல்லாததால் பாண்டியனிடம் மறுநாள் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து மறுநாள் பாண்டியனிடம் மீனா, மாமா எனக்கு இப்போதைக்கு லீவு கிடைக்காது. அதனால் நான் சென்னைக்கு போகவில்லை என்று சொல்கிறார். அதே மாதிரி ராஜியும் எக்ஸாம் வருவதால் என்னால் லீவு போட முடியாது நானும் போகவில்லை என்று சொல்லி பாண்டியன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இதை வைத்து கண்டிப்பாக தங்கமயில் பிரச்சனை பண்ணும் விதமாக சரவணன் இடம் நம் கூட அவர்களுக்கு வர இஷ்டம் இல்லாததால் தான் வரவில்லை என்று மாமாவிடம் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் தம்பி வருகிறார்கள் என்று பாசத்தில் ரொம்பவே சந்தோசப்பட்டீர்கள். உங்களுடைய பாசம் கொஞ்சம் கூட அவங்களுக்கு இல்லை என்று சரவணன் மனதில் விஷத்தை விதைத்து தம்பிகள் மீது சந்தேகப்படும் அளவிற்கு சரவணன் மனதை மாற்றப் போகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்
- முதல் முறையாக பொண்டாட்டியை நினைத்து வருத்தப்படும் பாண்டியன்
- பாண்டியனை ஓரங்கட்டி விட்டு ராஜி மீனா எடுத்த முடிவு
- கோமதி அராஜகம் பண்ணியதால் கொந்தளிக்கும் பாண்டியன்