செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஒரே வெற்றியால் சுற்றிவரும் அரை டசன் தயாரிப்பாளர்கள்.. அடடே இன்னும் மவுசு குறையாத தனுஷ் படம்

சினிமா பொறுத்தவரையில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு ஹிட் படம் கொடுத்தால் போதும். அந்த இயக்குனரை தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதுமட்டுமின்றி அந்த இயக்குனர் தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து விடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனரை 6 தயாரிப்பாளர்கள் சுற்றி வட்டமிட்டு வருகிறார்கள். அதாவது நடிகர் தனுஷ் கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்தார். சமீபத்தில் அவருக்கு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தது திருச்சிற்றம்பலம்.

Also Read : அந்தப் பட ட்ரெய்லரை பார்த்து பின் வாங்கிய தனுஷ்.. தோல்வி பயத்தில் டிசம்பர், ஜனவரி வேண்டாம் என ஓட்டம்

இந்தப் படத்தை இயக்கியவர் மித்ரன் ஆர் ஜவகர். இவர் தனுஷுக்கு யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற பல படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஒரு பட வெற்றியால் உச்சாணி கொம்புக்கு போன மித்ரன் ஜகவரின் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். மேலும் அவரிடம் கதை கேட்டு கால்ஷீட் உடனே வாங்குங்கள் என்று தயாரிப்பாளர்கள் பலரை தூது விட்டு வருகிறார்களாம்.

Also Read : டான்ஸ் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்.. சொந்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் வாத்தி

இப்போது ஆர்யாவை வைத்து மித்ரன் ஜவகர் ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம். இந்த படத்தை தயாரிக்க கிட்டத்தட்ட 6 தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அந்த வகையில் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ், லிஸ்டன் என்ற மலையாள தயாரிப்பாளர், பிவிஆர் சரபு ரெட்டி போன்றவர்கள் மல்லுக்கட்டி வருகின்றனராம்.

இதனால் யார் ஆர்யாவின் படத்தை தயாரிக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இப்போதே மித்ரன் கைவசம் பல கதைகள் உள்ளதால் அடுத்தடுத்த படத்தை தயாரிக்கவும் தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்களா. திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் மித்ரனுக்கு இன்னும் மவுசு குறையாமல் உள்ளது.

Also Read : மொக்க படத்தை தலையில் கட்டிய ஆர்யா.. உண்மையை வெளியே சொல்லி அசிங்கப்படுத்திய உதயநிதி

Trending News