திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சரண்யா பொன்வண்ணனுக்கு 2ம் திருமணம் செய்து வைத்த இயக்குனர்.. முதல் கணவர் யார் தெரியுமா?

Actress Saranya Ponvannan: நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா பொன்வண்ணன். ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் கதாநாயகியாக இருந்ததை விட இப்போதுதான் இவருக்கு மவுசு அதிகம்.

ஏனென்றால் டாப் நடிகர்கள் பலருக்கும் சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக நடித்திருக்கிறார். அதிலும் எம்டன் மகன், தென்மேற்கு பருவக்காற்று, களவாணி, வேலையில்லா பட்டதாரி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்து இருப்பார். இவர் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Also Read : நயன்தாராவை பற்றி புட்டு புட்டு வைத்த சரண்யா பொன்வண்ணன்.. இப்படி பட்டவரா லேடி சூப்பர் ஸ்டார்

இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகளின் திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் சரண்யா பொன்வண்ணன் 1988 இல் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்திலேயே பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலையில் தான் சரண்யா மற்றும் பொன்வண்ணன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சரண்யா பொன்வண்ணனின் முதல் கணவர் ராஜசேகர் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சின்னத்திரை தொடர்களில் நடித்து பெரும் புகழும் பெற்றுள்ளார்.

Also Read : தரித்திரம் புடிச்சவன் என ஒதுக்கப்பட்ட இயக்குனர்.. கடைசியில் பாரதிராஜா கடனை தீர்த்ததே அவர்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மிர்ச்சி செந்தில் அப்பாவாக நடித்து பாராட்டை பெற்றிருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜசேகர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். சரண்யா பொன்வண்ணனுக்கு இப்படி ஒரு முதல் கணவர் இருப்பது பலரும் அறியாத விஷயம்.

ஆனாலும் அடுத்ததாக ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சினிமாவிலும் பல உயரங்கள் அடைந்து உச்சத்தில் இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தையல் போன்ற பிற தொழில்களிலும் சரண்யா பொன்வண்ணனுக்கு ஈடுபாடு உண்டு. நிறைய மாணவர்களுக்கும் இதை பயிற்று வித்து வருகிறாராம்.

Also Read : பாரதிராஜாவிடம் திமிர்த்தனமாய் கேட்ட வாய்ப்பு.. பெரிய பெரிய யானைகளை கவத்திய கர்வம்

Trending News