Actor Rajini: சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ரஞ்சித் நடந்து கொண்ட முறை பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. சூப்பர் ஸ்டார் பற்றிய கேள்விக்கு அவர் நக்கலாக சிரித்து ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார்.
அதைத்தொடர்ந்து நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹாஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. அப்போதும் ரஞ்சித் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கவில்லை.
அதற்கு மாறாக என்னுடைய சிரிப்புக்கு இவ்வளவு பவரா? சும்மா சிரிச்சதுக்கே இப்படி எல்லாம் பேசுறீங்க என கூறி எரியிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினார்.
ரஞ்சித்தை திட்டிய மோகன் ஜி
இதனால் கடுப்பான ரசிகர்கள் இப்போது வரை அவரை திட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் திரௌபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி தன் பங்குக்கு ரஞ்சித்தை திட்டி தீர்த்துள்ளார்.
சாதாரண இயக்குனராக இருந்த ரஞ்சித்துக்கு சூப்பர் ஸ்டார் தான் வாழ்க்கை கொடுத்தார். அவர் கொடுத்த வாய்ப்பு தான் இவரை பெரிய உயரத்திற்கு அழைத்துச் சென்றது.
ஆனால் அந்த நன்றியை மறந்து விட்டு நக்கலாக சிரிக்கலாமா? அந்த நன்றி கூட கிடையாதா? என ரஞ்சித்தை விளாசி உள்ளார். மேலும் திரௌபதி படத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.
அந்த நன்றியை இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன். இதை நான் ஒவ்வொரு மேடையிலும் சொல்வேன் என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் சூப்பர் ஸ்டாரை இப்போது பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். ஆனால் அவரை மாதிரி ஒரு நல்லவர் கிடையாது. அவரை கலாய்க்கும் அளவுக்கு யாருக்கும் தகுதி இல்லை என மோகன் ஜி தன் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.