சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பொறுத்த வரைக்கும் இளம் இயக்குனர்களை அதிகமாக ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர். இவர் கடந்த சில வருடங்களாக தான் இப்படி இயக்குனர்களை நேரில் அழைத்து பாராட்டும் செய்தி வீடியோ வரை வருகிறது. ஆனால் அதற்கு முன்பிலிருந்து ரஜினிக்கு இந்த பழக்கம் இருந்திருக்கிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில், இயக்குனர் லிங்குசாமி இயக்கிய திரைப்படம் தான் ரன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ரன் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் லிங்குசாமியை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். மேலும் அவரின் அடுத்த பிளான் பற்றியும் விசாரித்து இருக்கிறார் ரஜினி.
Also Read: எம்ஜிஆருக்கு அடுத்து அஜித்துக்காக கோவில் கோவிலாக சுற்றும் நடிகர்.. கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத ஏகே
அப்போது லிங்குசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அவருடைய அடுத்த படத்தின் கதையை சொல்லி இருக்கிறார். அந்தக் கதை ரஜினிக்கு ரொம்பவும் பிடித்துப் போகவே தான் அந்த படத்தில் நடிப்பதாக சொல்லி இருக்கிறார். ஆனால் லிங்குசாமி அதை ஒத்துக்கொள்ளவில்லை.
2005 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய திரைப்படம் தான் ஜி. இந்தப் படத்தில் தான் ரஜினி நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால் அதில் அஜித் நடிக்க இருப்பதாக சொல்லி லிங்கசாமி மறுத்துவிட்டாராம் .
அந்த படத்தில் அஜித் கல்லூரி மாணவராக நடிக்க இருக்கிறார். எனவே அந்த கதை உங்களுக்கு செட் ஆகாது என்று சொன்னாராம் லிங்குசாமி. ரஜினி கல்லூரி மாணவனுக்கு பதிலாக ஏதேனும் கம்பெனியில் பணி புரிவது போல் கதையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூட சொல்லிப் பார்த்தாராம். லிங்குசாமி கடைசி வரை மறுத்துவிட்டாராம்.
Also Read: 25 ஆண்டுகளுக்கு முன்னரே காப்பாற்றி விட்ட ரஜினி.. பயன்படுத்திக் கொள்ள தெரியாத தயாரிப்பாளர்.!
கடைசியில் அஜித்தை வைத்து லிங்குசாமி எடுத்த அந்த ஜி திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஒருவேளை ரஜினிக்காக அவர் கொஞ்சம் கதையை மாற்றி இருந்தால் படம் வெற்றி பெற்றாலும் பெற்றிருக்கும். மேலும் தற்போது தொடர் தோல்விகளை கொடுத்து வரும் லிங்குசாமி ரஜினியை இயக்கி இருந்தால் அவருடைய சினிமா வாழ்க்கையும் மாறி இருக்கும்.
Also Read: கதாநாயகி தான் ஹீரோவே.. அந்த படத்தில் முதல் முதலாக இணைந்த சூப்பர் ஸ்டார், கேப்டன், சத்யராஜ்