வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

செம்பருத்தி டீக்கு ப்ரமோஷன் செய்த நயன்தாரா.. நடிக்கிற வேலைய மட்டும் பாருங்கன்னு நோஸ்கட் செய்த டாக்டர்

Nayanthara: நயன்தாரா சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். இப்போது அவருடைய கைவசம் ஒரு டஜன் படங்கள் இருக்கிறது. அதிலும் சமீபத்தில் நயன் கவின் இருவரும் ரொமான்டிக் போஸ் கொடுத்து வெளியிட்டு இருந்த போட்டோ பயங்கர ட்ரெண்டானது.

இப்படி நடிப்பில் பிசியாக இருந்தாலும் பிசினஸையும் அம்மணி கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். அது மட்டும் இன்றி சமீப காலமாக இவர் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்.

தினம் தினம் புதுப்புது போட்டோக்கள் வீடியோக்கள் என ஷேர் செய்து வருகிறார். அதில் சமீபத்தில் அவர் செம்பருத்தி பூ டீயின் நன்மைகள் குறித்து ஒரு பதிவை போட்டிருந்தார். இந்த டீயை குடித்து வருவதால் உடம்புக்கு மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

nayanthara
nayanthara

அதேபோல் சருமத்திற்கும் நல்லது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என பல விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து கல்லீரல் நிபுணர் பிலிப்ஸ் என்பவர் ஒரு பதிவை போட்டுள்ளார. அதில் அவர் நயன்தாரா சோசியல் மீடியாவில் அதிக ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கிறார்.

nayanthara
nayanthara

அவர்களை எல்லாம் செம்பருத்தி பூ டீ குடிக்க வேண்டும் என இந்த பதிவின் மூலம் சொல்லியிருக்கிறார். ஆனால் செம்பருத்தி பூ டீ உடல் பிரச்சினைகளை தீர்க்கும் என மருத்துவ பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இது அவருடைய ஊட்டச்சத்தை நிபுணருக்கான பிரமோஷன் போல தெரிகிறது.

நயன்தாராவுக்கு நோஸ்கட் கொடுத்த டாக்டர்

செம்பருத்தி பூ டீ குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லாததால் யாரும் இதை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனால் பெண் குழந்தைகள் பருவமடைவது, குழந்தை பிறப்பு போன்றவை தாமதமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன்தாரா ஊட்டச்சத்து நிபுணரின் பதிவுகளையும் இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்மறை கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது.

உண்மையில் நயன்தாரா சொல்வதற்கு முன்பே பலரும் செம்பருத்திப்பூ தேநீரை குடித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். கிராமப்புறங்களில் இது ஒரு வழக்கமாகவே இருக்கிறது. மேலும் இப்போது பலரும் இது போன்ற ஹெர்பல் தேநீர் பற்றி விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் கல்லீரல் நிபுணரின் கருத்து ஒரு அதிர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இன்றி இப்ப செம்பருத்திப்பூ டீயை நாங்க நம்பி குடிக்கலாமா வேண்டாமா எனவும் நெட்டிசன்கள் குறும்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படித்தான் சமந்தா ஹைட்ரஜன் பெராக்ஸைடு குறித்து ஒரு பதிவை போட்டு வசமாக சிக்கினார். அவரை கைது செய்ய வேண்டும் என்ற அளவுக்கு பஞ்சாயத்து கிளம்பியது. அதேபோல் ஆர்வக்கோளாறால் நயன்தாராவும் இப்போது வசமாக சிக்கி இருக்கிறார்.

சமந்தா போல் பிரச்சனையில் சிக்கிய நயன்

Trending News