Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

ரஜினி பிறந்தநாளில் டபுள் விருந்து.. ‘தர்மன்’ கிளிம்ப்ஸ் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த மாஸ் அப்டேட்!

ரஜினி பிறந்தநாளில் டபுள் விருந்து.. ‘தர்மன்’ கிளிம்ப்ஸ் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்,ஆர்.மகேந்திரனின் டர்மெரிக் மீடியாவுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.‘ஓ மை கடவுளே’,‘டிராகன்’உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.


இப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா,சிம்ரன்,ராஷி கண்ணா,ஸ்ரீலீலா,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர் களில் நடிக்கின்றனர். மேலும், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியும் இப்படத்தில் இணைந்துள்ளார்.மருத்துவத் துறையைப் பின்னணியாகக் கொண்ட கேரக்டரில் ரஜினிகாந்த் நடிப்பதாகவும்,அவரது கேரக்டர் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே,ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதியை முன்னிட்டு ‘தர்மன்’படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடப் படக்குழு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சுமார் 45 முதல் 58 வினாடிகள் வரை இந்த வீடியோ இருக்கும் என்றும், அனிருத் இசைப் பணிகளை முடித்ததும் வெளியீட்டுக்கான வேலைகள் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.


மேலும்,இப்படத்தை ஏப்ரல் 29-ம் தேதி தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும்,இந்தத் தேதிக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பு நவம்பர் 23-ம் தேதி தொடங்கி டிசம்பர் இறுதி வரை நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் கிளிம்ப்ஸ் வீடியோவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படுமா?என்பதுதான் ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.