உலக அளவில் பிரபலமாக இருக்கும் ரஜினிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே இவருடைய திரைப்படங்கள் கோடிக்கணக்கில் வசூல் செய்வதோடு ரசிகர்களால் கொண்டாடப்படும் வருகிறது. இப்படி புகழின் உச்சியில் இருக்கும் ரஜினி நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்கிறாரா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் வெளி உலகத்தில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் ரஜினி தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட மன உளைச்சலில் இருக்கிறார். இதற்கு அவருடைய குடும்பம் தான் முக்கிய காரணம் என்றால் அது பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. எப்படி என்றால் ரஜினியின் குடும்பத்தினர் பணத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
Also read: லால் சலாம் படத்தால் தலைவலியில் ரஜினிகாந்த்.. மகளுக்காக சூப்பர் ஸ்டார் அனுபவிக்கும் ரண வேதனை
இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை சொல்லலாம். ஒரு முறை ரஜினி நடத்திவரும் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது நீதிமன்றம் வரை கூட சென்றது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் கூட கொடுக்க முடியவில்லையா என்ற விமர்சனங்களும் எழுந்தது. அதன் பிறகு அந்த பிரச்சினை ஒரு வழியாக முடித்து வைக்கப்பட்டது.
அதேபோன்று அவர் சினிமாவை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார். அதில் ரஜினி வருமான வரி சரியாக செலுத்தவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு ரஜினியின் மனைவி ஏதேதோ கூறி சமாளித்து பின்பு அந்த பணத்தை செலுத்தினார். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சூப்பர் ஸ்டாரின் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகி கொண்டிருக்கிறது. இப்போது கூட ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பற்றி ஏகப்பட்ட சர்ச்சை செய்திகள் வெளியாகி வருகிறது.
Also read: ஜெட் வேகத்தில் சூப்பர் ஸ்டார்.. நெல்சனை டம்மியாக்கும் ரஜினிகாந்த்
அவர் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து தற்போது இயக்கும் லால் சலாம் திரைப்படம் வரை அனைத்துமே சர்ச்சையாக தான் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் தன் அப்பா பெயரை பயன்படுத்தி ஓவர் ஆட்டம் போடுவதாக வெளிப்படையாகவே பலரும் பேசி வருகின்றனர். இவை அனைத்தும் ரஜினிக்கு தெரிந்தாலும் எதுவும் கேட்க முடியாத சூழ்நிலையில் தான் அவர் இருக்கிறாராம்.
ஏனென்றால் ரஜினிக்கு பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அவருடைய மனைவி பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே அவர் தன் ரசிகர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு போட வேண்டும் என்ற எண்ணத்தை கூட கைவிட்டு விட்டார். அது மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் கூட அவர் தன்னுடைய இயல்பை மறைத்து நடிக்கும் நிலைமையில் இருக்கிறார். இப்படி கோடான கோடி ரசிகர்களின் மனதில் தலைவராக இருக்கும் ரஜினிக்கு நிஜ வாழ்வில் இப்படிப்பட்ட சோகங்கள் இருக்கிறது என்பது பலருக்கும் வேதனையை கொடுக்கிறது.
Also read: பொன்னியின் செல்வனுக்காக கெஞ்சி கூத்தாடிய மணிரத்னம்.. எல்லாத்துக்கும் வழிவிட்டு ஓகே சொன்ன தலைவர்