திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து மார்க்கெட் இழந்த நடிகர்.. டாப் ஹீரோவா ஜொலிக்க வேண்டிய மனுஷன்

Actor Ramki: 90களின் காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் வளர்ந்து வரும் ஹீரோக்களாக இருக்கும் பொழுதே ஒரு சில நடிகர்கள் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமலும் போயிருக்கிறார்கள். ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இது போன்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் இன்று வரை இருக்கிறார்கள்.

இந்த நடிகர்களின் லிஸ்டில் ஒருவர்தான் ராம்கி. ராமகிருஷ்ணன் என்ற தன்னுடைய பெயரை சினிமாவுக்காக ராம்கி என மாற்றிக் கொண்ட இவர் சின்ன பூவே மெல்ல பேசு என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடிக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் பேவரைட் கதாநாயகனாக மாறினார். அதன்பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன.

Also Read:ராம்கியை கண்ணீர் விட வைத்த நிரோஷாவின் 5 ஹாட் பாடல்கள்.. கார்த்திக்கும், கமலும் அடித்த லூட்டிகள்

ராம்கியின் ஹேர்ஸ்டைலுக்காகவே அவருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள். சினிமாவில் அறிமுகமான அடுத்த வருடமே கைவசம் டஜன் கணக்கில் படங்களை வைத்திருந்தார். இந்த படங்களில் பல வெற்றி பெற்றன. சில படங்கள் தோல்வி அடையாமல் வணிக ரீதியாக கை கொடுத்தன. அப்போதைய சினிமாவின் முன்னணி ஹீரோவாகவும் ராம்கி மாறினார்.

இப்படி ஓஹோ என்று வளர்ந்து கொண்டிருந்த நேரத்திலேயே தன்னுடன் நடித்த நடிகை நிரோஷா மீது காதல் வயப்பட்டார் ராம்கி. இருவரும் நெருங்கி பழகி வந்த சமயத்தில் இவர்களது காதல் விஷயம் தெரிந்து நிரோஷா வீட்டில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. நடிகை நிரோஷா 90களின் பாப்புலர் நாயகி ராதிகாவின் உடன் பிறந்த தங்கை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். வழக்கமான சினிமா காதலாக இல்லாமல் இவர்களது காதல் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்தது.

Also Read:90களில் கவர்ச்சிக்காகவே வாய்ப்பை பெற்ற 6 நடிகைகள்.. கமல் சூரசம்ஹாரம் செய்த ஹீரோயின் நிரோஷா

இவர்களது காதலை பிரிப்பதற்காக நிரோஷாவை அவருடைய சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பி வைத்தனர் குடும்பத்தினர். அங்கிருந்து தப்பி வந்த நிரோஷாவும், ராம்கியும் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்தினர். அதன் பின்னர் இருவீட்டார் சம்மதத்தோடு கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். காதலில் வெற்றி பெற்ற ராம்கிக்கு அதன் பிறகு சினிமா வாழ்க்கை பயங்கரமாக சறுக்கி விட்டது.

டாப் ஹீரோவில் ஒருவராக வர வேண்டிய ராம்கிக்கு திருமணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிறைய ஆன்மீக படங்களில் நடித்த ராம்கி பல வருடங்களுக்குப் பிறகு மாசாணி திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அடுத்தடுத்து படங்கள் நடித்து கொண்டு வந்தாலும் ராம்கியால் பழைய பெயரும் புகழையும் பெற முடியவில்லை.

Also Read:ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல போட்டி போட்டு நடித்த 5 அக்கா தங்கை நடிகைகள்.. நக்மாவை ஓரமாக உட்கார வைத்த ஜோ

Trending News