புதன்கிழமை, ஜனவரி 1, 2025

விஜய்யை ஸ்டாராக்க SAC ரொம்ப கஷ்டப்பட்டாரு.. தளபதியின் பிளாஷ்பேக்கை புட்டு புட்டு வைத்த பிரபலம்

Thalapathy Vijay: சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பது நடிகர் விஜயின் மிகப்பெரிய கனவு. ஆனால் தனக்கு பிடித்த சினிமாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டு இன்று மக்களுக்காக அரசியல் களம் காண்கிறார். இவ்வளவு நாளும் விஜய் மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு அவர் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவை ஆதரிக்கவில்லை என்பதுதான்.

இன்று தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் தன்னுடைய அப்பா அம்மாவை வரவழைத்து அதற்கு. வைத்து விட்டார். ஒரு பக்கம் இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது.

தளபதியின் பிளாஷ்பேக்கை புட்டு புட்டு வைத்த பிரபலம்

விஜய்க்காக ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் எவ்வளவோ கஷ்டப்பட்டார் என நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு கண் நிறைந்த சாட்சி நான் தான் என பிரபலம் ஒருவர் பேசியிருக்கிறார். பாட்ஷா படத்தில் ரஜினிக்கு நண்பராக நடித்த சரண்ராஜ் தான் அந்த பிரபலம்.

சரண்ராஜ் ஆரம்ப காலகட்ட சினிமாவில் விஜய் ஹீரோவாக சந்திரசேகர் ரொம்பவும் கஷ்டப்பட்டார் என சொல்லி இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொல்லியபோது அதற்கு எஸ்ஏ சந்திரசேகர் சம்மதிக்கவே இல்லை.

விஜய் சினிமாவில் வராமல் இருக்க எவ்வளவு தடை போட முடியுமோ அவ்வளவும் முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் தன்னுடைய மகன் இந்த முடிவில் உறுதியாக இருப்பதை தெரிந்துகொண்ட சந்திரசேகர் தோள் கொடுத்து துணை நின்றார்.

விஜயின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவர் போகாத இயக்குனர் ஆபீஸ், தயாரிப்பாளர்கள் அலுவலகமே கிடையாது. இந்த மூஞ்சியை எல்லாம் யார் ஹீரோவாக போட முடியும் என அவர் முன்னிலையில் பேசியிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் தன்னுடைய மகனின் கனவை நிறைவேற்றிய ஆக வேண்டும் என ஒரு அப்பாவாகவும், சினிமாவை கனவாக நினைக்கும் இளைஞனுக்கு சரியான பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இயக்குனராகவும் சந்திரசேகர் யோசித்து இருக்கிறார்.

நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், விஷ்ணு, தேவா போன்று தொடர்ந்து விஜய் படங்களை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய, தயாரித்தார். விஜய்யின் சினிமா கனவுக்கு பெரிய உறுதுணையாக அமைந்தது விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படம் தான்.

இந்த படத்தில் முரளி மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது என்ற ஒரு பாடலுக்கு ஆடி இருப்பார். முரளியை பார்க்கத்தான் பூவே உனக்காக படத்திற்கு தியேட்டருக்கு வந்து பின்னர் விஜயின் நடிப்பில் அசந்து போன தமிழ் ரசிகர்கள் அதிகம்.

இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆலமரமாய் இருக்கிறார் விஜய். மக்கள் எனக்கு கொடுத்ததற்கெல்லாம் நன்றி கடன் காட்டும் காலம் இது என்று சொல்லி தற்போது அரசியல் தலைவராக தன்னுடைய முதல் பயணத்தை தொடங்கி இருக்கிறார் தளபதி.

Trending News