நடிகர் வந்த புதிதிலேயே ஏராளமான பெண் ரசிகர்களை பெற்றிருந்தார். ஆனால் அதன் பின்பு அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் தொடர் தோல்வியை தந்தது. அதுமட்டுமின்றி அந்த நடிகருக்கு வாயில் தான் சனி என்று சொல்லலாம். ஏதாவது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு சர்ச்சையில் மாட்டிக்கொள்வார். இந்நிலையில் தற்போது பிரபல நடிகையாக இருக்கும் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்கள் இருவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அந்த காதல் பிரேக் அப் போனது. மேலும் அந்தப் பிரபல நடிகை வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
Also Read :எக்ஸ் புருஷனுடன் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் நடிகை.. பதட்டத்தில் 2வது கணவர்
அப்போதும் அந்த நடிகை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில பதிவுகளை போட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தார் நடிகர். இந்நிலையில் தன்னுடன் நடித்த மற்றொரு நடிகை உடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இவர்கள் காதலிப்பதாக செய்திகள் வந்தும் இருவரும் மௌனம் சாதித்து வந்தனர். இரண்டாவதாக காதலிக்கும் அந்த நடிகைக்கு தமிழில் எந்த படமும் சரியாக போகவில்லை. அழகும் திறமையும் இருந்தும் ஒரு வெற்றிப் படம் கூட வருத்தத்தில் இருந்தார் நடிகை. அவரிடம் எப்படியோ பேசி தன் வசபடுத்தி உள்ளார் இந்த ஸ்மார்ட் நடிகர்.
Also Read :பணத்துக்காக குடும்பத்தையே மறந்த வாரிசு நடிகை.. அக்கட தேசத்தில் அடிக்கும் லூட்டி
மேலும் எங்கு சென்றாலும் இருவரும் ஜோடி போட்டு செல்வதுதான். அப்படி இருக்கையில் சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி ஜோடியாக பக்கத்து பக்கத்திலேயே அமர்ந்திருந்தனர். இதனால் இவர்கள் காதலிப்பது உறுதியாகி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி 43 வயதாகியும் சிங்கிளாக இருக்கும் அந்த நடிகருக்கு இப்பவாவது திருமணமாகட்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இதனால் விரைவில் இவர்களுக்கு டும் டும் நடக்க வாய்ப்புள்ளது.
Also Read :இப்பதான் வயசுக்கு வந்த மாதிரி வெட்கப்படுறீங்க, மானமே இல்லையா.. வெறுப்பை சம்பாதிக்கும் ஜோடி