Thalapathy Vijay: தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். ஒரு பக்கம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட போவதில்லை என்று விஜய் அறிவித்து விட்டாலும், மறுபக்கம் அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தொடர்ந்து திட்டங்களை பக்காவாக பிளான் பண்ணி தன்னுடைய நிர்வாகிகளுடன் செய்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் வரும் ஏப்ரல் மாதம் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அதன் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற இருக்கிறது. விஜய் இதுவரை எத்தனையோ ஆடியோ வெளியீட்டு விழா மேடைகளை அரசியல் மேடைகளாக பயன்படுத்தி இருந்தாலும், ஒரு கட்சித் தலைவராக அவருக்கு இதுதான் கன்னிப் பேச்சாக அமைய இருக்கிறது. அரசியல் கொள்கை மற்றும் ஒரு தலைவராக விஜய் நடவடிக்கை எப்படி இருக்கிறது என மற்ற அரசியல் தலைவர்கள் இந்த மாநாட்டில் இருந்து தான் கணித்துக் கொள்வார்கள்.
சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பார்த்துக் கொள்ளலாம் என்று இப்போது நாடாளுமன்ற தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள் அரசியல் கட்சி தலைவர்கள். இருந்தாலும் அவர்கள் போகும் இடத்தில் எல்லாம் விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதை அவர்களுக்கு தொடர்ந்து மீடியாக்களின் கேள்வி மூலம் ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
Also Read:அஜித்தை பற்றி தப்பா டமாரம் அடிக்கும் கூட்டம்.. ஒதுங்கிக் கொள்ளச் சொல்லும் தயாரிப்பாளர்
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களிடமும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது பற்றி கேட்கப்பட்டிருக்கிறது. 90களில் பிரபல ஹீரோவாக இருந்த நடிகர் ரஞ்சித் இடமும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஞ்சித், இதுவரை அரசியலுக்கு வந்தவர்கள் அவர்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதே இல்லை. கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என அவர்கள் மீது நாம் கேஸ் போட கூட முடியாது.
விஜய் பேரை பச்ச குத்துறன்
ஊழலை ஒழிக்கிறேன், மதுவை ஒழிக்கிறேன் என நிறைய பேர் சொல்லி விட்டார்கள். ஆனால் எதுவுமே தமிழ்நாட்டில் நடந்த பாடு இல்லை. ஒருவேளை விஜய் தேர்தலில் நின்று அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டால் கண்டிப்பாக அவரை நான் தெய்வமாக வழிபடுவது மட்டுமில்லாமல், அவரின் பெயரை என் நெஞ்சில் பச்சை கூட குத்திக் கொள்வேன். ஏனென்றால் இதுவரையில் தமிழ்நாட்டில் அரசியலுக்கு வந்தவர்கள் சொன்னதை செய்ததே கிடையாது.
மாற்றம் வர வேண்டும் என்றால் முதலில் மக்கள் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும். அது மட்டும் இல்லாமல் காசுக்காக ஓட்டுக்களை விற்கக் கூடாது. அப்படி பணத்திற்காகத்தான் ஓட்டு போடுவேன் என்று வந்துவிட்டால் ஒரு விஜய் இல்லை ஓர் ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியாது என நடிகர் ரஞ்சித் தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
Also Read:GOAT ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு இப்ப வாய்ப்பே இல்லை.. வெங்கட் பிரபு கொடுத்த ஷாக்