Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

காதல் திருமணம் செய்து விபச்சாரத்துக்கு தள்ளப்பட்ட விசு பட நடிகை.. புருஷனால் நடுத்தெருவுக்கு வந்த சோகம்

காதல் திருமணம் செய்து விபச்சாரத்துக்கு தள்ளப்பட்ட விசு பட நடிகை.. புருஷனால் நடுத்தெருவுக்கு வந்த சோகம்

Veteran Director Visu: பொதுவாக சினிமாவை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு சொந்த வாழ்க்கை பெரும்பாலும் சரியாக அமையாது. பத்தில் ஒரு நடிகை தான் புருஷன், பிள்ளைகளோடு நன்றாக வாழ்வார்கள். பாதி பேர் என்ன ஆனார்களே என்று தெரியாமல் போய்விடும். அப்படி […]

Veteran Director Visu: பொதுவாக சினிமாவை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு சொந்த வாழ்க்கை பெரும்பாலும் சரியாக அமையாது. பத்தில் ஒரு நடிகை தான் புருஷன், பிள்ளைகளோடு நன்றாக வாழ்வார்கள். பாதி பேர் என்ன ஆனார்களே என்று தெரியாமல் போய்விடும். அப்படி காணாமல் போனவர் தான் இந்த விசு பட நடிகை.

தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் விசு பட நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம். ஒவ்வொரு காட்சியிலும் படம் பார்ப்பவர்கள் பாராட்டும் வகையில் தான் நடிகைகளை நடிக்க வைத்திருப்பார் விசு. அவருடைய படங்களில் நடிகைகளுக்கு கவர்ச்சி மற்றும் அலங்காரம் எதுவுமே அவசியமில்லை.

நடிகைகள் லட்சுமி, சுஹாசினி, கமலா காமேஷ் போன்றவர்கள் எல்லாம் விசுவின் படைப்பில் ஜொலித்தவர்கள். இதில் முக்கியமாக சொல்ல வேண்டிய மற்றொரு நடிகை மாதுரி. இந்த நடிகையை சரியாக தெரியாதவர்களுக்கு அடையாளப்படுத்தும் படம் தான் சம்சாரம் அது மின்சாரம்.

நடிகை மாதுரி அந்தப் படத்தில் வாகை சந்திரசேகருக்கு மனைவியாக நடித்திருப்பார். கணவன் மீது அதீத அன்பு அதே நேரத்தில் ஈகோ காட்டும் பெண்ணாக வருவார். வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் ஒதுங்கியே இருக்கும் கேரக்டர்.

மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்த மாதுரி சம்சாரம் அது மின்சாரம் படத்தின் மூலம் தான் தமிழுக்கு அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே மாதுரி தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்தார். அதன்பின்னர் நடிகை மாதிரி 1995 ஆம் ஆண்டுக்குப் பின் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.

நடிகை மாதுரிக்கு அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவருடன் திருமணம் நடந்திருக்கிறது. அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மாதுரி தன்னுடைய சொத்தை விற்று கடனை அடைத்திருக்கிறார். ஆனால் அவருடைய கணவருக்கு ஒரு முக்கிய பாடகரின் மனைவியுடன் தவறான உறவு இருந்து வந்திருக்கிறது.

இதனால் நடிகை மாதுரி அவருடைய கணவரை விவாகரத்து செய்து இருக்கிறார். அதன் பின்னர் சொத்துக்களும் இல்லாததால் மாதுரி பணத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் மாதுரி.

இந்த வழக்கிற்கு பிறகு மாதுரி எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. மாநிறமான முகம், குடும்பப் பாங்கான முகவெட்டு இதனால் ரசிகர்களிடையே பிரபலமானவர் மாதுரி.

சினிமாவை சரியாக கையாள தெரியாமல் தோற்று போன நடிகைகளில் ஒருவராக காணாமல் போய் விட்டார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.