ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எம்ஜிஆரின் கைரேகை பார்த்து மொத்தத்தையும் சொன்ன நடிகை.. முதலமைச்சரா.? அட போம்மா அங்கிட்டு என நம்பாத புரட்சித் தலைவர்

 Actor MGR: தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனி ஆதிக்கம் செலுத்தியவர் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல நடிகை ஒருவர் எம்ஜிஆரை பற்றிய மொத்த விஷயத்தையும் கைரேகை பார்த்து புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

ஆனால் அவற்றையெல்லாம் நம்பாமல் அட போம்மா அங்கிட்டு என எம்ஜிஆர் அசால்ட்டு கட்டி இருக்கிறார். மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் உடன் நடிகை பானுமதி இணைந்து நடித்தார். இதில் எம்ஜிஆரின் பேச்சு, நடிப்பு, எதை செய்தாலும் கம்பீரமாக செய்வார்.

இதை பார்த்து பானுமதி ஆச்சரியப்பட்டார். பானுமதிக்கு கைரேகை பார்க்கத் தெரியும். அதனால் எம்ஜிஆருக்கு ஆசைப்பட்டு, அவருக்கு கைரேகை பார்த்தார். ஆனால் எம்ஜிஆருக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இருப்பினும் எல்லாரும் சொல்லி வற்புறுத்தியதால் கையை காட்டினார்.

Also Read: அசைவ கறிக்கு அடிமையான 4 அக்ரஹார நடிகர்கள்.. எம்ஜிஆரை விட ஒரு படி மேலே போய் பொளந்து கட்டிய கமல்

எம்ஜிஆருக்கு கைரேகை பார்த்த நடிகை

அப்போது பானுமதி எம்ஜிஆரை, ‘ மிஸ்டர் ராமச்சந்திரன் நீங்கள் பிற்காலத்தில் பேரும் புகழும் பெறப் போகிறீர்கள்!. இந்த உலகமே கொண்டாடும் உன்னத ஸ்தானத்தை அடைவீர்கள். ஆனால் சினிமாவால் அல்ல’ என்று கூறினார். உடனே அங்கிருந்த எல்லோரும் கை தட்டினார்கள். அப்படியே நடித்து எம்ஜிஆர் உச்சம் பெற்று அரசியலிலும் வளர்ந்து முதலமைச்சரானார்.

சிஎம் ஆன எம்ஜிஆர் ஒரு மேடையில் பேசும்போது பானுமதி கீழே உட்கார்ந்து இருந்தார். அப்போது பேசிய எம்ஜிஆர், ‘இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் பானுமதி அம்மையார் என் கைரேகை பார்த்து சொன்னார். அதெல்லாம் இப்போது நடந்து விட்டது’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Also Read: குடித்தே மரண படுக்கைக்கு சென்ற நடிகர்.. காப்பாற்ற போராடிய எம்.ஜி.ஆர்

Trending News