Vijay-Trisha: ‘உலை வாயை மூடினாலும், ஊர் வாய மூட முடியாது’ என்று சொல்லுவாங்க. அப்படி இப்போ ஊர் வாயில் மாட்டிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.
தளபதி அரசியலுக்கு நுழையும் போதே அவரோடு தொற்றிக் கொண்ட வதந்தி தான் நடிகை திரிஷா. இதற்கு காரணம் மீண்டும் இருவரும் லியோ படத்தில் இணைந்து நடித்தது தான்.
பற்றாத குறைக்கு சங்கீதா விஜய் சமீப காலமாக பொது வேலைகளில் தலை காட்டுவதில்லை. இதனால் இவர்களுக்குள் விவாகரத்து வரை நடந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகிறது.
வாயை கொடுத்து மாட்டி கொண்ட பிரபலம்!
இந்த நிலையில்தான் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் விஜய் மற்றும் திரிஷா பயணித்ததாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
விமான பயணத்தின் தகவல்கள் இருக்கும் பேப்பர் போன்ற சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. இதில் விஜய்யோடு சேர்த்து எட்டு பேர் பயணித்திருக்கிறார்கள்.
அதில் நடிகை த்ரிஷாவும் ஒருவர். ஒருவேளை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் கலந்து கொள்வது தெரிந்து இவரும் அந்த திருமணத்திற்கு செல்வதற்காக விஜய்யுடன் பயணித்திருக்கலாம்.
இருவரும் தொடர்ந்து படங்கள் நடித்து வருவதால் இவர்களுக்குள் நட்பு இருப்பது சகஜமான ஒன்று.
ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்கிற என்ற பெயரில் வலைப்பேச்சு பிஸ்மி ஏடாகூடமாக ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது விஜய் உடன் த்ரிஷா பயணம் செய்தால் என்ன தவறு.
அவர் அரசியலுக்கு வருவதால் எதுவுமே செய்யக்கூடாது என ஏதாவது இருக்கிறதா. எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்பொழுது ஜெயலலிதா அவருக்கு கட்சி வேலைகளில் உதவவில்லையா.
எம்ஜிஆரிடம் வரும் அத்தனை கோப்புகளையும் ஜெயலலிதா தான் முதலில் சரி பார்ப்பார். அதன் பின்னால் தான் எம்ஜிஆர் அதில் கையெழுத்திடுவார் என பேசி இருக்கிறார்.
நட்பின் நிமித்தமாக இருவரும் சக நடிகை திருமணத்திற்கு சென்று வந்தார்கள் என சொன்னா இதில் பிரச்சனையே கிடையாது.
அதை விட்டுவிட்டு எம்ஜிஆர் ஜெயலலிதா என இவர் பேசி இருப்பதால் இந்த வீடியோ பெரிய நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.