வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.. 15 நாளில் பிச்சுகிட்டு போன காதல் ஜோடி

ஆசை 60 நாள் மோகம் 30 நாளுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. அப்படித்தான் நம்ம கோடம்பாக்கத்து குயில் சின்னத்திரை வட்டாரத்துல பரபரப்பா பேசிக்கிட்டு இருக்குற ஒரு சமாச்சாரத்தை எடுத்துக்கிட்டு வந்திருக்கு. என்னன்னா சமீபத்துல சீரியல் மூலமா காதலிச்ச அந்த ஜோடி கோலாகலமா திருமணத்தையும் நடத்தி முடிச்சாங்க.

இது சோசியல் மீடியாவுலயும் பரபரப்பா பேசப்பட்டு வந்துச்சு. ஆனா திடீர்னு என்ன நடந்துச்சோ தெரியல அந்த ஜோடி கல்யாணம் ஆன 15 நாளிலேயே பிச்சுகிட்டு ஆளுக்கு ஒரு திசையில போயிருக்காங்க. இப்ப அவங்களோட கதை தான் மீடியாக்களுக்கு தீனி போட்டுக்கிட்டு இருக்கு.

Also read: கண்டமேனிக்கு காட்டிய கவர்ச்சி.. பலான காட்சிக்கு ரூட் போட்ட இயக்குனர், மோசம் போன நடிகை

அப்படி என்னதான் நடந்துச்சுன்னு விசாரித்து பார்த்ததில் பல சம்பவங்கள் அம்பலமாகி இருக்கிறது. அதாவது சம்பந்தப்பட்ட நடிகை காதலனின் வார்த்தையை உண்மை என்று நம்பி வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் அந்த காதலர் நடிகையிடம் எதிர்பார்த்த விஷயமே வேறு.

ஆனால் கல்யாணத்துக்கு முன் எதுக்கும் மசியாத அந்த நடிகையை வேறு வழியில்லாமல் தான் அவர் திருமணம் செய்து கொண்டாராம். அது மட்டுமல்லாமல் மற்றொரு விவகாரமும் இப்போது தலைதூக்கி இருக்கிறது. என்னவென்றால் அவர் தன் மனைவியின் தோழிக்கும் ரூட் விட்டிருக்கிறார். எதார்த்தமாக பேசுவது போல் உரசுவது போன்ற வேலைகளையும் செய்திருக்கிறார்.

Also read: கவர்ச்சி நடிகையோடு பப்ளிக்காக மல்லுக்கட்டிய குடும்ப குத்து விளக்கு.. கூச்சமே இல்லாமல் பேசிய கெட்ட வார்த்தை

இதை மனைவி கண்டுபிடித்ததால் தான் இப்போது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து விட்டதாம். அதனாலேயே அந்த நடிகர் மனைவிக்கு முன்பாக மீடியாவில் பேட்டி கொடுத்து அசிங்கப்படுத்த ஆரம்பித்திருக்கிறாராம். இப்படி குடும்ப சண்டையை வீதிக்கு கொண்டு வந்து கல்யாணத்தை கேலி கூத்தாக்கிய இந்த ஜோடி தான் இப்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறார்கள்.

Trending News