திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் மார்க்கெட்டை காலி செய்ய நினைக்கும் சைக்கோ இயக்குனர்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் தளபதி

தளபதி விஜய்யின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்காதா என பல இயக்குனர்கள் காத்துக் கிடக்கிறார்கள். இப்போது விஜய், லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக முதல் முறையாக வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்தில் விஜய் கூட்டணி போட இருக்கிறார்.

இந்நிலையில் சைக்கோ இயக்குனர் ஒருவர் விஜய்க்காக கதை தயார் செய்ய இருக்கிறாராம். மேலும் என்னுடைய கதை விஜய்க்கு கண்டிப்பாக பிடிக்கும் என்றும் உறுதியாக இருக்கிறார் அந்த இயக்குனர். அதாவது லியோ படத்தில் விஜய் வில்லனாக ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

Also Read : லியோ படத்திற்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் வெங்கட் பிரபு.. விஜய் செய்த செயலால் ஹேப்பியான லோகேஷ்

இதில் இயக்குனர் மிஷ்கினும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் பல வருடங்களாகவே விஜய் மற்றும் மிஷ்கின் இடையே பழக்கவழக்கம் இருந்து வருகிறது. மேலும் சித்திரம் பேசுதடி படத்தை பார்த்துவிட்டு விஜய் தனக்கு ஒரு படம் பண்ணுமாறு மிஷ்கின் இடம் கேட்டுள்ளார்.

ஆனால் மிஷ்கினோ முடியாது என்று கூறிவிட்டார். காரணம் என்னவென்றால் நான் கதைக்காக தான் படம் எடுப்பவன், கதாநாயகனுக்காக எடுக்க மாட்டேன் என பஞ்ச் டயலாக் பேசி உள்ளார் மிஷ்கின். ஆனால் இப்போது அவர் இயக்கத்தில் உருவாகும் படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை என்பதால் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read : விஜய் படம் என்ற தெனாவெட்டில் இருந்த வெங்கட் பிரபு.. கஸ்டடியால் ஒரே அடியாய் கவிழ்த்து விட்ட AGS

இந்த சூழலில் விஜய்க்காக நான் கதை ஒன்று எழுத போகிறேன், அப்பாயின்மென்ட் கேட்டால் உடனே தளபதி கொடுத்து விடுவார், அதுமட்டுமின்றி என்னுடைய கதையையும் தேர்வு செய்துவிடுவார் என மிஷ்கின் பெருமை பேசி வருகிறாராம். மேலும் விஜய்யின் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கதையை தயார் செய்து வருகிறாராம்.

ஒரு காலகட்டத்தில் கதைக்காக படம் எடுப்பேன் என்று சொன்ன மிஷ்கின் இப்போது விஜய்காக படம் எடுக்க முன்வந்துள்ளார். இதற்கு காரணம் சினிமா அவரை மாற்றி உள்ளது. அவருடைய படங்கள் தோல்வியை தழுவியதால் மசாலா படத்தை எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் மிஷ்கின் படத்தில் நடித்தால் விஜய்யின் மார்க்கெட் காலி தான் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும் மிஷ்கினிடம் இதை எப்படி சொல்வது என்றும் விஜய் மாட்டிகொண்டு முழித்து வருகிறார்.

Also Read : விஜய்யை நம்ப வைத்து கழுத்தறுத்த இயக்குனர்.. கேஜிஎஃப் நடிகரை வைத்து காய் நகர்த்தும் சன் பிக்சர்ஸ்

Trending News