சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நடிகையை காதலித்து கர்ப்பம் ஆக்கிய பிரபலம்.. ரஜினி பட இயக்குனரின் மற்றொரு முகம்

Rajinikanth: சினிமா துறையை பொறுத்த வரைக்கும் காதல் ஏமாற்றம் என்பது சகஜமான விஷயம் ஆகிவிட்டது. ஆனால் இந்த செய்தியில் வரும் பிரபலத்தை பற்றி தெரிய வந்தபோது, அட இவர் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறாரா என ரொம்பவும் ஏமாற்றமாக நிறைய பேருக்கு இருக்கும். பொதுவெளியில் நல்ல மனிதன் என்ற பெயர் வாங்கிய இவர் ஒரு பெண்ணை காதலித்து குழந்தையுடன் கழட்டி விட்டிருப்பது ரொம்பவே தர்மசங்கடமான விஷயமாக இருக்கிறது.

ரஜினி பட இயக்குனர்

ரஜினிகாந்த் நிறைய மூத்த இயக்குனர்களில் இருந்து, இன்றைய இளம் இயக்குனர்கள் வரை பணியாற்றி இருக்கிறார். அதில் ரஜினிகாந்தின் வாழ்க்கையை மாற்றிய இயக்குனர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள். கே பாலச்சந்தர், பாரதிராஜா, கே எஸ் ரவிக்குமார் போன்றவர்கள் எல்லாம் ரஜினிக்கு நல்ல திறப்பு முறைகளை கொடுத்தவர்கள் தான்.

ரஜினியை மாஸ் ஹீரோவாக காட்டிக்கொண்டிருக்கும் போது, அவருக்குள் இருக்கும் நல்ல நடிகனை வெளிக்கொண்டு வந்தவர் தான் இயக்குனர் மகேந்திரன். ரஜினிக்கு முள்ளும் மலரும் மற்றும் ஜானி என்ற இரண்டு அற்புதமான கதைகளை கொடுத்தார். உதிரிப்பூக்கள் போன்ற உணர்வுபூர்வமான கதையை கொடுத்த இவர் ஒரு பெண்ணின் உணர்வில் விளையாடி இருக்கிறார்.

Also Read:ஜில்லா கலெக்டரை உதறி தள்ளிய சூப்பர் ஸ்டார்! வேட்டி சட்டைக்கு ஒத்துக் கொண்ட தலைவர்

ரஜினி நடித்த ஜானி படத்தில், ஸ்ரீதேவியுடனே பயணிக்கும் ஒரு பெண் கேரக்டர் இருக்கும். இதில் நடித்தவர் தான் நடிகை பிரேமி. இவர் 60 ஆண்டுகளாக சினிமாவில் பலதரப்பட்ட கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். ஜானி பட சமயத்தில் இவருக்கும் இயக்குனர் மகேந்திரனுக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் மகேந்திரன் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து, ஒரு ஆண் குழந்தையையும் பெற்றிருக்கிறார்கள். பொருளாதார சிக்கல்கள் காரணமாக மகேந்திரனால் இரண்டு குடும்பங்களையும் சமாளிக்க முடியவில்லை. இதனால் நடிகை ப்ரேமியுடன் ஏழு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து விட்டு, அவரை விட்டு விலகி முதல் மனைவியுடன் இணைந்து விட்டிருக்கிறார்.

சமுதாயத்தில் மிகப்பெரிய பெயருடன் இருக்கும் மகேந்திரன் இப்படி ஒரு விஷயத்தை செய்தது ரொம்பவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. முதல் மனைவியுடன் இணைந்த பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் அமைந்தது.

Also Read:பாட்ஷா பட ஸ்டைலில் நிவாரணம் வழங்கும் ரஜினிகாந்த்.. குருன்னு சொல்ற சிஷ்யனுங்க கத்துக்கோங்க!

Trending News