Director Bala: இக்கரைக்கு அக்கரை பச்சை என்று எப்பவுமே தோணும். ஆனா அந்த கரைக்கு போன அப்புறம் தான் அதோட உண்மை நிலவரம் என்னன்னு தெரியும். அப்படித்தான் தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் இயக்குனர் பாலா என்றால் ரொம்ப கண்டிப்பான இயக்குனர் என்று சொல்வார்கள்.
நடிகர்கள், நடிகைகளை டார்ச்சர் செய்வது, சில நேரங்களில் கோபத்தில் அடிப்பது என அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் பாலாவுக்கே கிளாஸ் எடுக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் கண்டிப்பான இயக்குனர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உதாரணத்திற்கு இயக்குனர் வசந்த பாலன் அங்காடி தெரு பட சமயத்தில் அந்த புதுமுக ஹீரோவை ஸ்கேல் வைத்து அடித்த வீடியோக்களை எல்லாம் ஒரு காலகட்டத்தில் வெளியானது ஞாபகம் இருக்கும். இவர்களுக்கு எல்லாம் பாடம் சொல்லித் தரும் அளவுக்கு கண்டிப்பான இயக்குனர் என்றால் அது ஹரி.
எப்படி அதிரடி ஆக்சன் கதைகளை படமாக்குகிறாரோ உண்மையிலேயே அவருடைய கேரக்டரும் அப்படித்தான். ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டால் அதில் நடிக்கும் மொத்த நடிகர்களும் அவருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
பெரிய நடிகர்கள் நடிகைகள் என்று அவரிடம் பாரபட்சம் எல்லாம் கிடையாது. அவர் சொல்லும் ஹோட்டலில் தான் தங்க வேண்டும். அதேபோன்று அந்த ப்ரொடக்ஷனில் எந்த மாதிரி சாப்பாடுகள் வழங்கப்படுகிறது அதைத்தான் சாப்பிட்டு ஆக வேண்டும். நடிகர் நடிகைகளுக்கு அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் சாப்பாடு தான்.
அதை தாண்டி விதவிதமாக செய்து கொடுக்கிறேன், சிறப்பாக பார்த்துக் கொள்கிறேன் என்று கணக்கெல்லாம் ஹரி கிட்ட செல்லுபடி ஆகாது. ஒரு முறை நடிகர் ஒருவர் எனக்கு ஜிம் வைத்த ஹோட்டலில் ரூம் வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
கிராமத்தில் சூட்டிங் எடுக்கிறோம் அது போன்ற வசதியான ஹோட்டல் எல்லாம் கிடைக்காது என்று சொல்லி அவர் புக் பண்ணிய ஹோட்டலில் தான் தங்க வைத்திருக்கிறார். அதே போன்று ஹரிக்கு நெருக்கமான நடிகரின் காதலி அவருடைய படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அந்த சமயத்தில் படத்தின் ஹீரோ, அந்த நடிகரின் காதலியிடம் கொஞ்சம் நெருக்கமாக பழகி இருக்கிறார். இதை கவனித்த இயக்குனர் ஹரி படத்தின் அடுத்தடுத்த காட்சிகளில் இருவருக்கும் ஒன்றாக நடிக்கும் சீன் இல்லாதபடி படத்தையே எடுத்து முடித்திருக்கிறார். அந்த அளவுக்கு பயங்கரமான கண்டிப்பு பேர்வழி. பெரிய ஹீரோ என்ற ஜம்பம் எல்லாம் இவர் கிட்ட செல்லுபடி ஆகாது.