சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அறிமுகமான படத்தை வெளியில் சொல்ல முடியாத ஹீரோ, ஹீரோயின்.. அந்த அசிங்கத்தை எப்படி என் வாயால சொல்றது

Controversial Movie: சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அவர்கள் அறிமுகமாகும் படம் என்பது ரொம்ப முக்கியமானது. ஒரு சிலருக்கு தான் இந்த முதல் படம் என்பது வெற்றி படமாக அமையும். பல பேருக்கு அறிமுகப்படம் தோல்வியில்தான் முடிந்திருக்கும். மிகப்பெரிய நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு கூட முதல் படம் ரிலீஸ் ஆகாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

ஆனால் தாங்கள் நடித்த முதல் படத்தைப் பற்றி எங்கேயுமே பேச முடியாத சூழ்நிலை இந்த இரண்டு பேருக்குத்தான் நடந்திருக்கிறது. நாங்கள் இந்த படத்தில் தான் அறிமுகமானோம் என இந்த ஹீரோ மற்றும் ஹீரோயின் வெளியில் எங்குமே சொன்னது கிடையாது. ஏன் எங்களுடைய முதல் பட அனுபவம் இதுதான் என்று கூட பேசியது கிடையாது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருப்பவர்கள் தான் ஹரிஷ் கல்யாண் மற்றும் அமலாபால். நடிகை அமலா பாலுக்கு இன்று வரை பெயர் சொல்லும் படமாக இருப்பது பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் தான். நடிகர் ஹரிஷ் கல்யாண் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்தாலும், அவருக்கு ஹிட் படம் என்றால் 2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படம் தான்.

Also Read: வாய்ப்புக்காக மட்டுமே அட்ஜெஸ்ட்மென்ட் செஞ்சேன்.. மாத்திரை கொடுத்து கொல்ல பார்த்த நடிகையின் குடும்பம்

அமலாபால் மற்றும் ஹரிஷ் கல்யாண் பற்றி நன்றாகத் தெரிந்தவர்களுக்கு கூட, அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது தெரிந்திருப்பது பெரிய விஷயம் தான். அமலா பால் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவருமே கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரே படத்தில் அறிமுகமானார்கள். அந்த படத்தின் பெயர் சிந்து சமவெளி.

சர்ச்சையை ஏற்படுத்திய படம்

உயிர் மற்றும் மிருகம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய இயக்குனர் சாமி தான் சிந்து சமவெளி படத்தையும் இயக்கியது. பள்ளியில் ஒன்றாக படிக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் அமலாபால் இருவரும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் கல்லூரியில் படிப்பதற்காக விடுதியில் சேர்க்கிறார்.

தனிமையில் இருக்கும் அமலாபால் மற்றும் ஹரிஷ் கல்யாண் உடைய அப்பா வீராசாமிக்கு இடையே தகாத உறவு ஏற்பட்டுவிடும். அதன் பின்னால் ஏற்படும் விளைவு தான் இந்த படத்தின் கதை. இந்த படம் ரிலீஸ் ஆன பின் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கும் அமலாபால் மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவருமே எப்பொழுதுமே இந்த படத்தை பற்றி பேசுவதே கிடையாது.

Also Read: ஆசை தீர்ந்ததும் கழட்டி விட்ட இசை பிரபலம்.. குடியும், பாட்டிலுமாக முடங்கிப் போன நடிகை

Trending News