வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் சேதுபதி போல் திருந்தாமல் விளையாடும் நடிகர்.. தெளிவில்லாமல் பெயரை கெடுத்துக் கொள்ளும் ஹீரோ

Vijay Sethupathi: சினிமாவை பொருத்தவரைக்கும் வெற்றி தோல்வி என்பது அதிர்ஷ்டம் போல தான். ஒரு படத்திற்காக மொத்த உழைப்பையும் ஹீரோ போட்டாலும், அந்த படம் பெரிய தோல்வியை அடைவதும் உண்டு.

அதேபோல எதுவுமே செய்யாமல் சும்மா ஸ்கிரீனில் வந்து நின்னாலே ஜெயிக்கும் ஹீரோக்களும் உண்டு. அதேபோல தான் வருஷத்துக்கு பத்து படம் கொடுத்தாலும் ஒன்னும் தேறாமல் மக்கள் மனதில் நிற்காத நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வருசத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும், நின்னு பேசும் படமாக கொடுத்து மக்கள் கொண்டாடும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆரம்ப கால சினிமா வாழ்க்கை என்பது ரொம்பவும் கஷ்டமான ஒன்றுதான்.

ஆனால் சூது கவ்வும், பீட்சா போன்ற படங்கள் வெளியான பிறகு அவருடைய ரேஞ்ச் வேற லெவலுக்கு மாறியது. ஆனால் அதை அவர் சரியாக உபயோகப்படுத்தினாரா என்று கேட்டால், இல்லை என்பதுதான் உண்மை.

நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன், புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என தன்னுடைய சினிமா கேரியரை மொத்தமாக சொதப்பினார். சில நேரத்தில் ஒரு வருடத்திற்கு 4,5 படங்கள் எல்லாம் அவருக்கு ரிலீஸ் ஆகும்.

ஆனால் ஒன்று கூட பெயர் சொல்லும் அளவுக்கு இருக்காது. எப்பவாவது நெகட்டிவ் கேரக்டரில் நடித்தால் ஓகே. ஆனால் தொடர்ந்து வில்லன் கேரக்டரில் நடித்ததால் அவருடைய ஹீரோ இமேஜ் கூட கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது.

இதை ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி நன்றாகவே புரிந்து கொண்டார். இனிமேல் இதுபோன்ற தவறான முடிவு எதையும் எடுத்து விடக்கூடாது என்பதில் உஷாரா ஆகிவிட்டார். இனி வில்லன் கேரக்டரில் கூட நடிக்க மாட்டேன் என பகிரங்கமாக மீடியா முன்பு சொல்லி இருந்தார்.

விஜய் சேதுபதி பாதையிலேயே அவர் செய்த தப்பை இன்னொரு ஹீரோவும் செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய இசையின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட ஜிவி பிரகாஷ் தான் அது.

தெளிவில்லாமல் பெயரை கெடுத்துக் கொள்ளும் ஜிவி பிரகாஷ்

இவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், சற்றும் யோசிக்காமல் அடுத்தடுத்து கதைகளை தேர்வு செய்து நடித்தார். A கன்டென்ட் படங்களில் நடிக்கும் ஹீரோ என்று முத்திரை குத்தும் அளவுக்கு இவருக்கு நிலைமை போய்விட்டது.

நடுவில் இரண்டு மூன்று நல்ல படங்கள் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையையும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்போதைக்கு இவருடைய கைவசம் டஜன் கணக்கில் படங்கள் இருக்கின்றன.

தொடர்ந்து இவருடைய படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருப்பதால் மக்கள் மனதில் எந்த படமுமே நிற்கவில்லை. வரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தின அடித்து விட வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறாரா என்று தெரியவில்லை.

பட வாய்ப்புகள் என்பதை தாண்டி, ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றால் தான் வெற்றி பெற முடியும் என்பதை இவர் புரிந்து கொள்ள வேண்டும். விஜய் சேதுபதி தன்னுடைய தப்பை உணர்ந்து விழித்துக் கொண்டார். அதேபோல் ஜிவி பிரகாஷ் கூட தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Trending News