Rajinikanth – Vijay: சமீபத்தில் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் ஹுக்கும் பாடல் வெளியானதில் இருந்து தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் அந்தப் பாடலின் வரிகளை சமூக வலைத்தளத்தில் மீண்டும் மீண்டும் ட்ரெண்டாக்கி ரஜினி பதிலடி கொடுத்திருக்கிறார், விஜய்க்காக எழுதப்பட்ட பாட்டு என ஆளுக்கு ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்புமாறு பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொரு பக்கம் ரஜினி இப்படி செய்திருக்கக் கூடாது, அவர் இமேஜுக்கு இதெல்லாம் தேவையில்லாத ஒன்று, அவர் சொல்லி தான் சூப்பர் ஸ்டார் யார் என்று தெரிய வேண்டுமா, அவர் பட்டத்தை யார் படிக்கப் போகிறார்கள் என்று முக்கிய புள்ளிகள் பலர் மீடியாக்களில் பேட்டி கொடுக்கிற பெயரில் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
Also Read:எடுபடாமல் போன லியோ, பவரை காண்பித்த ஜெயிலர்.. அனிருத் பக்கம் திரும்பிய கத்தி
ஆனால் ரஜினிகாந்த் இப்படி எதுவுமே நடக்காத மாதிரி மாலத்தீவில் சுற்றுலா சென்று இருக்கிறார். இந்த நிலையில் இது போன்ற சர்ச்சைகளுக்கும், சலசலப்புகளுக்கும் பதிலடி கொடுக்குமாறு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். தற்போது இது ரஜினி ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
ரஜினிக்கு ஒருவரை பழிவாங்க வேண்டும், கஷ்டப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே கிடையாது. ஒரு படம் அல்லது பாடல் வெளியானால் அதை ரசியுங்கள், அதை விட்டுவிட்டு யார் யாரை திட்டுகிறார், யார் யாருக்கு பதிலடி கொடுக்கிறார் என்பதை எல்லாம் ஆராய வேண்டாம். அந்தப் படத்திற்கு, கதைக்கு அது போன்ற பாடல் வரிகள் தேவைப்பட்டதால் மட்டுமே அப்படி எழுதப்பட்டிருக்கும். ரஜினியும் அப்படி இருக்கும் பட்சத்தில் தான் ஒத்துக் கொண்டு நடித்திருப்பார் என்று சொல்லி இருக்கிறார்.
Also Read:சுயலாபத்திற்காக சூப்பர் ஸ்டாரை சீண்டும் விஜய்.. என்ன கட்டம் கட்டினாலும் உங்க பாட்ஷா பலிக்காது
தளபதி விஜய் ரஜினிகாந்தை பார்த்து வளர்ந்த பையன். ரஜினிக்கு விஜய் போட்டி என்பதெல்லாம் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று சொல்லி இருக்கிறார். உண்மையிலேயே விஜய் தன்னை ரஜினியின் ரசிகன் என்றுதான் ஆரம்ப காலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டார். அதேபோல் ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்தின் வசனங்களை மனப்பாடம் பண்ணி பேசி தான் தன் அப்பாவிடம் சினிமாவில் நடிக்க சம்மதமே வாங்கினார்.
ரஜினிகாந்தை பொறுத்த வரைக்கும் பாட்ஷா படத்திலிருந்து அவர் மாஸ் ஹீரோ ஆகிவிட்டார். அவருடைய படங்களுக்கு இதுபோன்ற பாடல்கள் மற்றும் பஞ்ச் வசனங்கள் தேவைப்படுகிறது. அதைத்தான் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது ரஜினி யாருக்கோ பதில் சொல்கிறார், பதிலடி கொடுக்கிறார் என்று சொல்வதெல்லாம் தேவையில்லாத விஷயமாகவே கருதப்படுகிறது.
Also Read:அஜித்தை பத்தி இனி யாரும் வாயைத் திறக்க கூடாது.. அரசியல் லாபத்திற்காக விஜய் போட்ட கண்டிஷன்