Thalapthy Vijay: தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவரும் அடுத்தடுத்து காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டார். தற்போது தமிழ்நாட்டின் மொத்த அரசியல் பிரபலங்களின் பார்வையும் விஜய்யின் அடுத்த கட்ட நகர்வின் மீதுதான் இருக்கிறது. விஜய்க்கு இந்த விஷயத்தில் மிகப்பெரிய துணையாக இருந்து, அவர் கொடுக்கும் திட்டங்களை சரியாக செய்து முடிப்பது அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தினர் தான்.
விஜய்க்கு இது போன்ற திட்டங்களை சொல்லிக் கொடுத்து, அவருடைய ஒட்டுமொத்த அரசியல் முடிவுக்கும் பின்னால் இருப்பது விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் என சில நாட்களுக்கு முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இந்த ஒட்டு மொத்த திட்டத்திற்கும் பக்க பலமாக விஜய் உடன் இருப்பது முக்கியமான அரசியல் புள்ளி என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Also Read:விஜய்க்கு ஜால்ரா தட்டிய வனிதா.. ஒட்டு மொத்த சர்ச்சைக்கும் அவங்க ஸ்டைலிலே கொடுத்த பதில்
நரேந்திர மோடி, நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலின், ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி போன்ற பலதரப்பட்ட அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களை வகுத்துக் கொடுத்து அவர்களின் அரசியல் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரசாந்த் கிஷோர் தான் தற்போது தளபதி விஜய்க்கு ஆலோசகராக இருக்கிறார்.
கல்வி விருது வழங்கும் விழா, அந்த விழாவில் மாணவர்கள் மூலம் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என வலியுறுத்த வைத்த விஜய்யின் பேச்சு என அத்தனைக்கும் பின்னால் இருப்பது இந்த பிரசாந்த் கிஷோர் தான். ஏற்கனவே விஜய் மற்றும் பிரசாந்த் ஐதராபாத்தில் சந்தித்ததாகவும், தமிழக அரசியலை பற்றி விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பதறி அடித்துக் கொண்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுத்தனர்.
Also Read:அரசியலுக்காக பல வருடமாக போடப்பட்ட திட்டம்.. கைவசம் இத்தனை தொழில்களை வைத்திருக்கும் தளபதி
ஆனால் விஜய் முழுக்க முழுக்க பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி தான் அடுத்தடுத்து அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார் என தற்போது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பிரசாந்த் கிஷோரை பொறுத்த வரைக்கும் அவர் பொதுவாக இந்த கட்சிதான், இந்த மாநிலத்தில் ஜெயிக்கும் என்று சொன்னாலே அது தான் நடக்கும். அப்படி இருக்கும் போது இப்போது விஜய்க்கு திட்டங்களையே தீட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்திய தகவலின் படி விஜய் மக்கள் இயக்கத்தினர் முதலில் நாடாளுமன்ற தேர்தலை நேரடியாக சந்திக்க இருப்பதாகவும், அந்த தேர்தலில் கிடைக்கும் ஆதரவை பொருத்து அடுத்த சட்டமன்றத் தேர்தலிலேயே விஜய் நேரடியாக முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Also Read:விஜய்க்கு பிடித்திருக்கும் பெரிய ஈகோ.. கொஞ்சம் கூட யோசிக்காமல் தளபதி செய்யும் வேலை