வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தயாரிப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி ப்ளூ சட்டை.. இத மட்டும் உன்னால செய்ய முடியுமா என சவால்?

Blue Sattai Maran: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் வாயிலாக வெளியாகும் படங்களை பற்றி விமர்சனம் செய்து வருகிறார். டாப் நடிகர்களான ரஜினி முதல் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையுமே கடுமையாக விமர்சிக்க கூடியவர். அதுவும் குறிப்பாக சமீபகாலமாக ரஜினியை டார்கெட் செய்து நிறைய பதிவு போட்டு வருகிறார்.

இதனால் ஒட்டுமொத்த நடிகர்களின் ரசிகர்களும் இவருக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். ஆனாலும் இவர் இவ்வளவு செல்வாக்குடன் தற்போதும் இருப்பதற்கு காரணமும் ரசிகர்கள் தான். அத்தி பூத்தார் போல் ஏதாவது ஒரு சில படங்கள்தான் இவர் புகழ்ந்து பேசி இருக்கிறார். மற்ற எல்லா படங்களையும் தன்னால் முடிந்த வரை பங்கமாக கலாய்த்து விடுவார்.

Also Read : ரஜினியை ஒருமையில் பேசி வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை.. உங்க வயசுக்குன்னு ஒரு மட்டு மரியாதை இல்லையா!

மேலும் திரையரங்குக்கு சென்று படங்களை பார்ப்பதற்கு முன் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்த்துவிட்டு தான்பல ரசிகர்கள் செல்கிறார்கள். அதனால்தான் இவரது யூடியூப் சேனலில் ஒவ்வொரு வீடியோவுக்கும் பல லட்சம் பார்வையாளர்களை பெறுகிறது. இதுபோன்ற சினிமா விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கிறார்கள்.

பெரிய அளவில் கடன் வாங்கி படத்தை எடுத்து, ப்ரோமோஷன் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால் இது போன்ற விமர்சகர்களால் முதல் நாள் கலெக்சன் கூட சில படங்களால் செய்ய முடியவில்லை. இந்நிலையில் நேரடியாகவே ப்ளூ சட்டை மாறனை பிரபல தயாரிப்பாளர் டி சிவா விமர்சித்துள்ளார்.

Also Read : லோகேஷை மானஸ்தர் என்று புகழ்ந்த ப்ளூ சட்டை.. 2k கிட்ஸ் அக்கப்போரால் கடுப்பாகி போட்ட பதிவு

அதாவது தயாரிப்பாளர்களின் ரத்தத்தை அட்டைப்பூச்சி போல் உறிஞ்சி தங்களது குடும்பத்தை வசதியாக வைத்துக் கொள்கிறார்கள். மேலும் ப்ளூ சட்டை மாறன் ஒவ்வொரு படத்தையும் இவ்வளவு விமர்சித்து வருகிறாரே தனது யூடியூப் சேனலில் வரும் விளம்பரம் ஏதாவது ஒன்றை கடுமையாக அவரால் பேச முடியுமா? இந்த சவாலை அவர் ஏற்றுக் கொள்கிறாரா.

ஏனென்றால் அந்த விளம்பரங்கள் மூலமாக தான் அவருக்கு காசு கிடைக்கிறது. ஆனால் கடனை வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பிழைப்பில் சினிமா விமர்சகர் என்ற பெயரில் மண்ணள்ளி போடுகிறார்கள் என்று வேதனையாக டி சிவா கூறியிருக்கிறார். இவர் வெங்கட் பிரபுவின் சரோஜா, அரவான் போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : காசு கொடுத்து பிரபாஸின் கேரியரை க்ளோஸ் செய்ய நடக்கும் சதி.. ப்ளூ சட்டை வெளியிட்ட ஷாக்கான பதிவு

Trending News