தமிழ் ரசிகர்களுக்கு புதிய திரில்லர் அனுபவத்தை வழங்கும் வகையில் ‘ஆக்டோபஸ்’ (Octopus) என்ற புதிய தமிழ் வெப் சீரிஸ் இன்று ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் அஸ்வின் குமார்,அர்ச்சனா ரவிச்சந்திரன்,வினோத் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்ட்டர்களில் நடித்துள்ளனர்.
தற்போது ஓடிடி தளங்களில் திரில்லர் கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில்,அந்த வரிசையில் ‘ஆக்டோபஸ்’ சீரிஸும் இணைந்துள்ளது. குறிப்பாக, வித்தியாசமான கதைக்களங்களையும் மர்மம் நிறைந்த காட்சிகளையும் விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தத் தொடர் கவனம் ஈர்க்கும் புதிய வரவாக அமைந்துள்ளது.
இந்த சீரிஸீன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள கேரக்ட்டர்களின் கெட்டப்பும், பின்னணியில் காணப்படும் மிஸ்ஸிங் போஸ்டரும் கதையில் ஏதோ மர்மமான சம்பவம் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. இருப்பினும்,தொடரின் முழுமையான சப்ஜெக்ட் மற்றும் கேரக்ட்டர்களின் பின்னணி குறித்த விரிவான தகவல்கள் இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை.
இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன்,வினோத் கிஷன் ஆகியோரின் நடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.தமிழ் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு மற்றுமொரு புதிய தேர்வாக இந்தப் படைப்பு வெளியாகியுள்ளது.
தியேட்டர்களைத் தாண்டி ஓடிடி வெளியீடுகளுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில்,ZEE5 தளத்தின் இந்தப் புதிய வெளியீடு கவனத்தைப் பெற்றுள்ளது.‘ஆக்டோபஸ்’சீரிஸ் தற்போது ZEE5 தளத்தில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.திரில்லர் கதைகளை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் இந்தத் தொடர் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




