திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே உறையில் இரண்டு கத்தி இருந்தா இப்படித்தான்.. தொகுப்பாளினிகளுக்குள் வெடித்த சண்டை

Gossip : பொதுவாகவே ஒரு உறையில் ரெண்டு கத்தி இருந்தால் பிரச்சனை தான் என்ற பழமொழியை கேட்டிருப்போம். அதேபோல் தான் ஒரே நிகழ்ச்சியில் 2 தொகுப்பாளினிகள் இருந்ததால் மிகப்பெரிய பிரச்சனையே வெடித்து பூதாகரமாக இருக்கிறது.

அதாவது பிரபல தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினி ஒருவர் பணியாற்றி வருகிறார். அதே தொலைக்காட்சியில் போட்டியாளராக வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார். தான் செய்ய வேண்டிய வேலையை தாண்டி தொகுப்பாளினி வேலையையும் பார்த்திருக்கிறார்.

அதனால் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பலமுறை என் வேலையில குறுக்கிடாதே என்று சூசகமாக சொல்லியிருக்கிறார். ஆனால் இவரும் இதே தொலைக்காட்சியில் பல வருடமாக இருந்ததால் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினிக்கு மரியாதை கொடுக்காமல் நடந்திருக்கிறார்.

இரண்டு தொகுப்பாளினிகளுக்குள் நடந்த சண்டை

பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளனி இனி தனக்கு மரியாதை இல்லாத இந்த இடத்தில் இருக்க மாட்டேன் என்று வெளியேறிவிட்டார். சும்மா செல்லாமல் தான் சென்றதுக்கான காரணத்தையும் யூடியூபில் சொல்லிவிட்டார்.

இப்போது இந்த தொகுப்பாளினுக்கு ஆதரவாக பலரும் பேசி வருகிறார்கள். பெரிய தொலைக்காட்சி என்பதால் அவருக்கு வக்காலத்து வாங்கி பல தொகுப்பாளனிகளின் நிகழ்ச்சிகள் பரிபோனதாக செய்திகள் அடுக்கடுக்காக வருகிறது.

அதையெல்லாம் சொன்னால் கேரியரே போய்விடும் என்பதால் பலர் வாயை திறக்காமல் மௌனம் காத்து வந்தனர். இப்போது இந்த தொகுப்பாளினி துணிச்சலாக வெளியே சொன்னவுடன் பலரும் தங்களுக்கு நடந்த விஷயங்களை கூறி வருகின்றனர்.

நடிகைகள் அனுபவிக்கும் சித்திரவதை

Trending News