இப்போது பான் இந்தியா படம் என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. ஏனென்றால் சமீபகாலமாக வெளியாகும் எல்லா படங்களுமே பான் இந்தியா படங்களாக வெளியாகிறது. குறிப்பாக எல்லா மொழியிலும் பரிச்சயமான நடிகர்களை தேர்ந்தெடுத்து ஒரு படத்தில் நடிக்க வைக்கிறார்கள்.
இது ஐந்து மொழிகளிலும் வெளியாவதால் ரசிகர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில் இப்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் 3d அனிமேஷனிலும் உருவாகிறதாம். இப்போது சூர்யாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வரலாற்று நாயகன் படம் உருவாக இருக்கிறது.
Also Read : வேள்பாரியில் சூர்யா இல்லை.. முரட்டுத்தனமான ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் ஷங்கர்
அதாவது கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் பொன்னியின் செல்வன். வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்போது ஜெயம் ரவி அறிமுக இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
பொன்னியின் செல்வன் படத்தை தவிர சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது இறைவன், அகிலன் என கையில் பல படங்களை வைத்துள்ளார். இந்த சூழலில் வேல் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் ஜெயம் ரவியின் படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார்.
Also Read : விஜய்க்கு போட்டியாக வசூல் மன்னனாக களமிறங்கும் சூர்யா.. லியோ படத்தை விட அதிக லாபத்தை பார்த்த ரோலக்ஸ்
இப்படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா 42 படத்தை போல இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளதாம். ஜெயம் ரவியின் படங்களில் முதல் முறையாக வெளியாகும் படமாக இப்படம் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் ஜெயம் ரவிக்கு இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 மற்றும் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளது. ஆகையால் தமிழ் சினிமாவில் தான் விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படத்தின் அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை ஜெயம் ரவி ரசிகர்களுக்கு ஏற்படுத்த கூடும்.
Also Read : சொந்த மண்ணுக்கு டாட்டா காட்டி மும்பைக்கு சென்ற ஜோ.. மனைவிக்காக பல கோடிகளை வாரி இறைக்கும் சூர்யா