புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அப்ப மகள் இப்ப மனைவி, நிம்மதி இல்லாமல் அல்லோல்படும் ரஜினி.. என்னடா இது தலைவருக்கு வந்த சோதனை

Latha Rajinikanth Fraud Case: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னதான் தலைமுறைகள் தாண்டிய நம்பர் ஒன் ஹீரோவாக இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் யாருமே சந்திக்காத அளவுக்கு ஏற்ற இறக்கங்கள் அதிகமாகவே இருக்கிறது. ஒருமுறை அவருடைய குருநாதர் கே பாலச்சந்தர் ஒரு பேட்டியில் ரஜினியை கேள்வி கேட்கும் பொழுது, நான் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தும் என் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று சொல்லி இருந்தார்.

அவ்வளவு பெரிய நடிகர் ஒரு பொது மேடையில் வந்து இப்படி சொல்வதற்கு என்ன காரணம் இருக்கும் என ஒட்டுமொத்த பொதுமக்களுமே அதிர்ச்சி தான் அடைந்தார்கள். கடந்த சில வருடங்களாகவே ரஜினியின் மகள்களால் அவருக்கு அடி மேல் அடி விழுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ரஜினியின் ரசிகர்களே அவருடைய மகள்கள் மீது அவ்வளவாக அபிமானம் இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

தாங்கள் நினைத்தது போல் திருமண வாழ்க்கை, பிடிக்கவில்லை என்றால் உடனே விவாகரத்து, படம் எடுக்கிறேன், இயக்குனராகிறேன் என்ற பெயரில் இஷ்டத்திற்கு ஏதாவது ஒன்று பண்ணி ரஜினியை கஷ்டப்படுத்திக் கொண்டே தான் இருந்தார்கள். மகள்கள் படுத்தியது பத்தாது என்று இப்போது மனைவியால் ரஜினியின் பெயருக்கு களங்கம் வரும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்திருக்கிறது.

லதா ரஜினிகாந்த் மீது மோசடி வழக்கு ஒன்று விழுந்திருக்கிறது. ரஜினி முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெறாததால் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. இந்த படம் தான் இப்போது லதா ரஜினிகாந்த் மீது வழக்குப் பாய்வதற்கும் காரணம் ஆகிவிட்டது.

இந்தப் படத்தின் தயாரிப்பிற்காக மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் ஆறு கோடி ரூபாயை ஆட் பியூரோ நிறுவனத்திடம் இருந்து பெற்று இருக்கிறார். இதற்கு லதா ரஜினிகாந்த் நான் முழு பொறுப்பு என்று கையெழுத்திட்டு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த பணம் முரளி என்பவரால் திருப்பித் தரப்படவில்லை. இதனால் தான் தற்போது லதா ரஜினிகாந்த் மீது வழக்கு வந்திருக்கிறது.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் போலி ஆவணம், தவறான அறிக்கையை சமர்ப்பித்தல் போன்ற குற்ற எண்களில் லதா ரஜினிகாந்த்தை கர்நாடகா நீதிமன்றம் விசாரிக்கலாம் என அனுமதி வழங்கி விட்டது. இந்த விசாரணைக்கு அவர் கோர்ட்டுக்கு கூட நேராக சென்று ஆஜராகும் நிலைமையில் தான் இப்போது இருக்கிறார். மகள்கள் செய்தது பத்தாது என்று இப்போது மனைவியும் ரஜினிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி விட்டார்.

Trending News