வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜயகாந்தின் இமேஜ் போய்விடக்கூடாது என போராடிய நண்பன்.. அந்த காதலுக்கு நோ சொல்ல இதுதான் காரணம்

Actor Vijaykanth: விஜயகாந்த் சினிமாவில் எந்த அளவிற்கு பேரும் புகழையும் சம்பாதித்திருக்கிறாரோ அதே அளவிற்கு நட்பையும் சம்பாதித்து இருக்கிறார். அப்படி இவருக்கு எல்லா விதத்திலும் தோள் கொடுத்து தோழமையாக இருந்தவர் தான் ராவுத்தர். இவர் என்ன சொன்னாலும் நம்முடைய நலனுக்காக தான் இருக்கும் என்று விஜயகாந்த் முழுமனதோடு இவரை நம்பி இருந்தார். அப்பொழுது விஜயகாந்த் காதலுக்கு இவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

அதாவது விஜயகாந்த் முக்கால்வாசி ராதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அப்பொழுது இவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்ப்பதற்கு மிகப் பிரமாதமாக இருந்தது. அதே நேரத்தில் இவர்கள் நடித்த படங்கள் வெற்றியும் பெற்றது. அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தால் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் காதலித்து வந்தார்கள்.

Also read: எங்கு போனாலும் கேப்டனின் பேச்சு தான்.. ஹிந்தி நடிகருக்கு முதல் வாய்ப்பை கொடுத்த விஜயகாந்த்

அடுத்து இவர்கள் திருமணம் செய்வதாக முடிவு எடுத்திருந்தார்கள். ஆனால் விஜயகாந்தின் உயிர் நண்பராக இருந்த இப்ராகிம் ராவுத்தர் இந்த கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதற்கு காரணம் ராதிகா ஏற்கனவே நடிகர் பிரதாப்பை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர்.

அது மட்டுமல்லாமல் இவர்களின் இருவருடைய ஜாதகமும் பொருந்தவில்லை. அதையும் மீறி திருமணம் நடந்தால் ராதிகா உன்னை விட்டு சீக்கிரம் பிரிந்து விடுவார் என்று சொல்லி இருக்கிறார். அத்துடன் ராதிகாவை திருமணம் செய்தால் உன்னுடைய ஹீரோ இமேஜ் பாதிக்கப்படும் என்று சொல்லி இவர்களுடைய காதலை மறுத்திருக்கிறார்.

Also read: 53 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் விஜயகாந்த், ரஜினி பட நடிகை.. மாப்பிள்ளை தேடும் குடும்பம்

அதற்கு விஜயகாந்த், நண்பர் சொல்லை தட்ட முடியாமல் தவித்து வந்திருக்கிறார். அதே நேரத்தில் ராதிகாவை மறக்க முடியாமலும், வேற கல்யாணத்திற்கு மறுப்பு சொல்லி இருக்கிறார். அப்பொழுது ராதிகா சாயலிலேயே ஒரு உறவுக்கார பெண்ணை கொண்டு வந்து விஜயகாந்த் கண் முன்னே நிறுத்திருக்கிறார்.

அவர் தான் பிரேமலதா, இவரை பார்த்தவுடன் ராதிகா போல இருப்பதால் விஜயகாந்த் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் விஜயகாந்த் நண்பர் சொன்னது போலவே ராதிகா இடைப்பட்ட காலத்தில் பல திருமணங்களை செய்து கொண்டு தற்போது சரத்குமார் உடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் பிரேமலதா விஜயகாந்தின் இந்த சூழ்நிலையிலும் பக்கபலமாக இருந்து வழி நடத்தி வருகிறார்.

Also read: விஜயகாந்த் போல் சுதாகரிக்க தெரியாமல் இமேஜை கெடுத்த விஜய் சேதுபதி.. தொடர்ந்து தேடி வரும் வாய்ப்பு

Trending News