ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

நிறைமாத கர்ப்பம், வேறு பெண்ணுடன் ஜல்சா பண்ணும் ஹீரோ.. தட்டி கேட்ட மனைவிக்கு நேர்ந்த கதி

கண்ணுக்கு லட்சணமாக ஒரு மனைவி வீட்டில் இருக்க பிரபல ஹீரோ ஒருவர் சக நடிகையுடன் ஊர் சுற்றி கொண்டிருக்கிறாராம். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகர் தற்போது முன்னணி சேனல் ஒன்றின் சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே இவருடைய வீட்டு பஞ்சாயத்து தான் இந்தியாவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு சக நடிகையுடன் தொடர்பில் இருக்கும் இவர் மீது மனைவி புகார் கொடுத்ததின் பெயரில் அந்த ஹீரோ கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர் மீண்டும் அதே சீரியலில் நடித்து வருகிறார். இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் அந்த நடிகையுடன் இருக்கும் தொடர்பை விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இன்னும் அதே வேலையை தான் அந்த ஹீரோ செய்து கொண்டிருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் மனைவியை பார்த்து கொள்கிறேன் என்று கூறி தான் அவர் ஜாமினே வாங்கி இருக்கிறார். ஆனால் வெளியில் வந்த பிறகு அவர் ஒரு முறை கூட தன் மனைவியை சென்று பார்க்கவில்லை. இத்தனைக்கும் சக நடிகைகள் அனைவரும் சேர்ந்து மனைவிக்கு வளைகாப்பு நடத்திய போது கூட அவர் அங்கு செல்லவில்லை.

Also read: பப்ளிசிட்டிக்காக பலான வீடியோ வெளியிட்ட நடிகை.. இப்ப அதுவே வினையாகி போன பரிதாபம்

இப்படி ஒரு பிரச்சனை சென்று கொண்டிருக்கும் நிலையில் வயிற்றுப் பிள்ளையுடன் இருக்கும் அந்த நடிகை தற்போது பயங்கர மன உளைச்சலில் இருக்கிறாராம். ஏனென்றால் அவர் தன் கணவருடன் சேர்ந்து கஷ்டப்பட்டு வாங்கிய அந்த வீடு தற்போது வங்கியின் கைக்கு செல்லும் நிலையில் இருக்கிறதாம். தன்னிடம் இருந்த நகைகளை எல்லாம் வைத்து முன்பணம் கட்டி வாங்கிய அந்த வீட்டிற்கு நடிகரின் மனைவி தான் இத்தனை நாள் இஎம்ஐ கட்டி இருக்கிறார்.

தற்போது இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில் சில மாதங்களாக அந்த இஎம்ஐ கட்டவில்லையாம். கணவரிடம் இது குறித்து கேட்டால் என்னால் கட்ட முடியாது வேண்டுமென்றால் பேங்க் வீட்டை எடுத்துக் கொள்ளட்டும் என்று அசால்டாக கூறுகிறாராம். இதனால் தற்போது அந்த வீடு கைவிட்டு போகும் நிலையில் இருக்கிறது. கர்ப்பிணியான அந்த நடிகை இப்போது இருக்கும் வீட்டை விட்டு எங்கு செல்வது என்று திணறி வருகிறாராம். அவருக்கு சின்னத்திரை வட்டாரத்தை சேர்ந்த சிலர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Also read: கடை திறப்பு விழாவில் இடுப்பை காட்டி கிள்ள சொன்ன 40 வயது ஆன்ட்டி.. பப்ளிசிட்டிக்காக அரங்கேறிய கேவலமான கூத்து

Trending News